CATEGORIES
Kategorien
செகந்திராபாத்துக்கு இன்று சிறப்பு ரயில்
சாத் மற்றும் கார்த்திகை ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
உயர் கல்வி பயில நிதித் தடைகள் நீக்கம்; பிரதமருக்கு ஆளுநர் பாராட்டு
மாணவர்கள் உயர் கல்வி பயில நிலவும் நிதித் தடைகளை நீக்க வித்யாலஷ்மி திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
அஸ்தினாபுரத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலம் மீட்பு
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள 52 சென்ட் நிலம் வருவாய்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
சென்னையில் தொடர் மழை: சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
சென்னையில் ளிரவு முதல் பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.
நெற்குன்றம் வீட்டுவசதித் திட்டம்: ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான முன்பணத் தொகை உயர்வு
சென்னை, நவ. 7: சென்னை நெற்குன்றம் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள், மாநில அரசுப் பணி அதிகாரிகளுக்கான முன்பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
குப்பைகளை ‘செல்வமாக்கும்’ திட்டம்: சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் விளக்கம்
பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை செல்வமாக்கும் திட்டத்தை சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது என சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் கலைச்செல்வி தெரிவித்தார்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வியாழக்கிழமை மாலை லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரசுப் பணி தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிகளை மாற்ற முடியாது
'அரசுப் பணிக்கான பணியாளர் தேர்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அந்தத் தேர்வு விதி முறைகளில் மாற்றம் மேற்கொள்ள முடியாது' என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைப்பு
மாநில அரசுகளுக்கு அமித் ஷா வேண்டுகோள்
தமிழகத்தில் நவ.13 வரை கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.7) 11 மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கமலா ஹாரிஸ் தோல்வி: சோகத்தில் துளசேந்திரபுரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிவாய்ப்பை இழந்தது, அவரது பூர்விக கிராமமான மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
மருத்துவக் காப்பீட்டின் கீழ் ஆயுஷ் சிகிச்சை பெற நடவடிக்கை
பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தடையின்றி பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய ஆயுஷ் துறை முன்னெடுத்துள்ளது.
மீம்ஸ்களில் முன்னிலை பெற்ற எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான மீம்ஸ்களில் அமெரிக்க தொழிலதிபரும் 'எக்ஸ்' வலைதள நிறுவனருமான எலான் மஸ்க் முன்னிலை பெற்றது தெரியவந்துள்ளது.
டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கமலா ஹாரிஸின் பெருமைகள் நிலைக்கும் !
இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர் கிடைப்பதற்கான வாய்ப்பு மீண்டும் ஒரு முறை கைநழுவியிருக்கிறது.
டிரம்ப்: சரிவிலிருந்து சரித்திர சாதனை...
2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப்புக்கு சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று தான் பலரும் நினைத்தனர்.
டிரம்ப் வெற்றியால் உற்சாகம்: சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தகதினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் தோல்வி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் புதன்கிழமை தோல்வியைத் தழுவின. லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
பாலினியை வெளியேற்றினார் கின்வென்
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியில், சீனாவின் ஜெங் கின் வென் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்றார். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி அந்த வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
விதித் குஜராத்தி 2-ஆவது தோல்வி, அர்ஜுன் ஆட்டம் டிரா
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்
நீட் மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காளி பூஜை பந்தலில் வன்முறை: விடியோ வெளியிட்ட செய்தியாளர்கள் இருவர் கைது
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூர் செய்தியாளர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
நடப்பு நிதியாண்டில் வேளாண்மை சார்ந்த துறைகளில் கடன் இலக்கை எட்ட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.