CATEGORIES
Kategorien
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும்
நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வலியுறுத்தி நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரி யாவுக்கு பாமக தலைவர் அன்புமணி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா; மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
தமிழகம் முழுவ தும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்கா ணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
மாநில அரசுகள் மூலம் உள்ளாட்சி நிதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
உள்ளாட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த நிதியை மாநில அரசுகள் மூலமாகத்தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
ரயிலில் "சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட கோவை வீராங்கனை கிமர் உயிரிழப்பு
ரயிலில் பயணித்தபோது 'சிக்கன் ரைஸ்' வாங்கி சாப்பிட்ட கோவையைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தார்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை
தவெக அறிவிப்பு
வ.உ.சி. நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி
சென்னை, நவ.18: 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் 88-ஆவது நினைவு நாளையொட்டி, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் அமைப்புச் செயலர், மாவட்டச் செயலர் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்: இருவர் கைது
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.10 கோடி மதிப்பிலான 4.50 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.12.41 கோடி பறிமுதல்
லாட்டரி அதி பர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.1241 கோடி பறிமுதல் செய்யப்பட்டதா கவும், ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித் தது கடந்த 2009 ஏப். 1 முதல் 2010 ஆக. 31 வரையிலான காலகட் டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ர.910.3 கோடி மார்ட்டினுக்குக் கஇிடைத்திருந்த தையும், அந்த பணத்தை அவர் 40 நிறுவனங்களின் அசையா சொத் துகளில் முதலீடு செய்திருந்ததை யும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந் தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு
உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு
ஆவடி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதையைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வீட்டை இடிக்க நோட்டீஸ்: இளைஞர் தற்கொலை
ஆவடி, நவ.18: திரு வேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, இளைஞர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
'வாழ்நாள் முழுவதும் கற்கும் முயற்சியை 6மற்கொள்ளுங்கள்'
மாணவர்கள் வாழ்நாள் முழுவதும்தொடர்ந்துகற்றுக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு, தங்களது அறிவாற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ அறி வியல் கழகம் (எய்ம்ஸ்) முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா வலியுறுத்தினார்.
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை உள்பட இருவர் காயம்: 10 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 வயது குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
டிச.21-இல் உழவர் பேரியக்க மாநில மாநாடு
பாமக சார்பில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர் தாஸ் தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி உற்பத்தி யாளர்கள் அம்பத்தூர் மண் டல அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோர வியாபாரிகளுக்கு 'ஸ்மார்ட் கடைகள்' ஒதுக்கீடு
சென்னை, நவ. 18: சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் (ஸ்மார்ட் கடைகள்) ஒதுக்கப்பட்டு வருகின்றன.
புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி
சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தல்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து செயலிழப்பால் இறப்புகளைத் தவிர்க்க முடியும்
நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பால் (ஆன்ட்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ்) நேரிடும் உயிரிழப்புகளை உரிய விழிப்புணா்வு இருந்தால் தடுக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.
100 பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்
சென்னை, நவ. 18: சென்னை யில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகேயுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவு, இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஹிந்து தர்மத்தைக் காப்பது ஆன்மிகம்
ஹிந்து தர்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
13 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள்
கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை எதிர்கொள்ள 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிறுசேமிப்பை இயக்கமாக மாற்றிய கூட்டுறவுத் துறை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு காலம் 90 நாள்களாக அதிகரிப்பு
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் முன்பதிவுக்கான காலம் 90 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம்: பிரேஸில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
பிரேசிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 கூட்டமைப்பில் இணைக்கப்பட்டதன் மூலம் தெற்குலகின் குரலை உயர்த்தியது போன்று, சர்வதேச அமைப்புகளையும் சீர்திருத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகள்
உக்ரைனுக்கு ஜோ பைடன் அனுமதி
மணிப்பூருக்கு மேலும் 5,000 துணை ராணுவப் படையினர்
மத்திய அரசு முடிவு
மாநிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு
நிதி ஆணையக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்
இந்தியாவிலிருந்து நவீன தொழில்நுட்பங்கள் உருவாக வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.