CATEGORIES
Kategorien
திருச்சியில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் உறவினர்கள் மறியல்
திருச்சியில் மின் சாரம் பாய்ந்து உயிரிழந்த இரு மின்வாரிய ஊழியர்களின் சடலங்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கும் - ஆளுநருக்கும் மோதல் கூடாது
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும்: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி மீண்டும் கேரளத்துக்கே கொண்டுசெல்ல வேண்டும்; கேரள அரசே பொறுப்பேற்று 3 நாள்களுக்குள் அகற்றி அது தொடர்பான அறிக்கையை டிச. 23-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அமித் ஷாவை கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம்
கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது திமுக அரசு என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 600 கோடி முறை மகளிர் பயணம்
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலமாக பேருந்துகளில் 600 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி கவிழ்ந்து விபத்து
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 50 அடி உயர நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயமடைந்தனர்.
தனியார் வங்கியில் மேலாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது
சென்னை தியாகராய நகரில் தனியார் வங்கிக்குள் புகுந்து மேலாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடலுக்குள் கார் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கார் விழுந்த விபத்தில், மாயமான ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.
கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாதெமியில் டிச.22 முதல் இலவச தேர்வு பயிற்சி
சென்னைகிங்மேக்கர் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச தேர்வு பயிற்சி வகுப்பு டிச.22-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதய வால்வு மாற்ற சிகிச்சையில் அதிநவீன நுட்பம் அறிமுகம்
இதய பெருநாடி வால்வு மாற்ற சிகிச்சையில் அதிநவீன நுட்பத்திலான சிகிச்சை முறை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் படைப்பகம்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவில் விதிமீறல் இல்லை
ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்
ரயில்வே செயலியில் 'ஆர் வேலட்' மூலம் பயணச்சீட்டு பெறுவோருக்கு 3% தள்ளுபடி
ரயில்வே செயலியில் உள்ள 'ஆர் வேலட்' மூலம் பயணச்சீட்டு பெறுவோருக்கு பயணச்சீட்டு தொகையிலிருந்து 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (டிச.20) வெளியிடப்படவுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அகத்தியர் குறித்த ஆய்வுகள்
இந்திய அறிவு மரபுகள் திட்டத்தின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அகத்தியர் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.
மயான பூமிகளை மேம்படுத்த மேயர் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மயானபூமிகளை மேம்படுத்துவது குறித்து சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
தைப்பூசம்: மேல்மருவத்தூரில் வைகை அதிவிரைவு ரயில் நின்று செல்லும்
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் வைகை அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை முதல் பிப்.11-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், வார விடுமுறை நாள்கள்; 706 சிறப்புப் பேருந்துகள்
கிறிஸ்துமஸ், வார இறுதி நாள்களை முன்னிட்டு 706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
தமிழகத்தில் சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
பாஜக-காங்கிரஸ் எம்.பி.க்கள் தள்ளுமுள்ளு
அம்பேத்கர் அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாசாணியம்மன் கோயிலின் 28 கிலோ தங்கம் எஸ்பிஐவசம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் காணிக்கையாக கிடைக்கப் பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கத்தை எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு புதன்கிழமை ஒப்படைத்தார்.
நீட் தேர்வு: பாடத் திட்டம் வெளியீடு
இளநிலை நீட் தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக்கொண்டார்.
சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி
சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் பட்டுவாடா 46% அதிகரிப்பு
இந்திய நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் கடன் பட்டுவாடா கடந்த அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி
ஜப்பானின் தனியார் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
காஸா: மேலும் 38 பேர் உயிரிழப்பு
காஸா குதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 பேர் யிரிழந்தனர்.
பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.