CATEGORIES
Kategorien
கலி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
மக்களை கவராத வாக்கு யாத்திரைகள்!
தேர்தல் நெருங்கும் நேரம். அனைத்துக் கட்சியினரும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று சித்தம் நொந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை இல்லாதவாறு கோரிக்கைகளை தூசி தட்டுகின்றனர். போராட்டங்களுக்கு ஒத்திகை பார்க்கின்றனர்.
தடுத்தார் பூமி ஆள்வார்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-3
ஆபாசம் வன்முறை...சோஷியல் மீடியா கட்டுப்படுமா?
தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக சாதாரண மக்களும் தங்கள் சிந்தனைகளை வடிக்க, சோஷியல் மீடியா என்னும் சமூக வலைத்தள ஊடகம் வழியமைத்துக்கொடுத்தது. தற்போது அந்த ஊடகமும் அரசின் கழுகுக்கண் பார்வைக்கு இலக்காகியுள்ளது. இணையத்தில் வரும் செய்தித்தளங்கள், அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டிருக்கிறார்.
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-2 தேடி சோறு நிதம் தின்று...
தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?
கங்கனா வீட்டில் கல்யாணம்!
நடிகை கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் அத்தனை எளிதாக பிரித்து விட முடியாது. எப்போதும் ரபரப்பை பற்ற வைத்துக் கொண்டே இருக்கும் கங்கனா, தன் குடும்ப விழா காரணமாக கொஞ்சம் 'கூல்' ஆகியிருக்கிறார்.
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
கார்த்திகை மாத ராசிபலன்கள்
வேலைதேடும் அன்பர்கள் செய்யும், செய்யவேண்டிய வேலைகளில் அதிக கவனம் தேவை. சுய முயற்சியால் வாழ்வில் நல்ல வசதிகளையும் பெறலாம். செவ்வாயின் உதவியால் செயல்களில் வேகம் ஏற்படும். குடும்ப வேலைகளை மட்டும் சற்று அமைதியுடன் கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் காரணம் நல்ல செலவுகளையும் ஏற்க வேண்டியதும் வரலாம். எதிர்ப்புகள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
அமெரிக்க வேலைக்கு போன நடிகை!
தமிழில், 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் தனு ஸ்ரீதத்தா.
மக்களை முட்டாளாக்கும் தேர்தல் கணக்குகள்!
கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. புதிய சேர்க்கை, நீக்கத்துடன் அணிசேர்த்து வாக்குகளை கவரும் கணக்கு களை தயார்செய்கின்றனர். ஆனால், நமது அரசியல்வாதிகள் போடும் சுயலாப தேர்தல் கணக்கு, பொதுமக்களுக்கு பெருநஷ்டமாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலான கூட் டணிகள் சந்தர்ப்பவாதமாகவே அமைந்துவிடுகின்றன. நிதி, தொகுதி, பதவியை குறிவைத்து அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தப்படுவதால் இந்த விபத்து நேர்கிறது.
லைக்ஸ் வெறியில் லைப்பை தொலைக்கும் இளம் ஜோடிகள்!
திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக நின்று ஒரு படம் எடுப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்ட அந்தக்காலம் போல் இப்போது இல்லை. போட்டோ, வீடியோ என்று திருமண நிகழ்வைப் பதிவு செய்வதற்கே பெருஞ்செலவு செய்கிறார்கள்.
உயிர் காக்கும் உணவுகள் 48 தொடர்
தாவரத்தின் இலை, தழை, காய், கனி, விதை, வேரொடு பூவும் உலகத்தாரால் உண்ணப்படுகிறது. வாழைப்பூ தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முக்கிய உணவாகிறது. வாழைப்பூ நன்றாக சமைத்தால் மீன் குழம்பு போல சுவைக்கும். இதயத்திற்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ வயிற்று போக்கை தடுக்கிறது.
ஆடை உலகின் ராணி!
உலகம் போற்றும் பெண்கள்-2
நான் எல்லோருக்கும் பிடிச்ச குழந்தை!-ராஷ்மிகா மந்தனா
கன்னட கண்ணழகி ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் அதிரடியாக ஹிட் அடித்து, இப்போது கார்த்தி ஜோடியாக நடித்திருக்கும் சுல்தான்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
சூரரைப் போற்று-விமர்சனம்
ஏர் ஓட்டு பவனையும் ஏரோபிளேனில் பறக்க வைக்க வேண்டும் என்ற தன் கனவுக்காக, விடா முயற்சியுடன் போராடும் ஒரு சாமானியனின் கதை 'சூரரைப் போற்று'.
பிட்னெஸில் பிஸியாகும் நடிகைகள்!
உடல் கட்டுக்கோப்பாக, கவர்ச்சியாக, அழகாக இருந்தால்தான் சினிமாவில் மார்க்கெட் நிலைக்கும் என்பதை இன்றைய நடிகைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
புன்னகையை கொண்டு வரும் தீபாவளி!
குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
வாழ்க்கை என்ன சொல்லுது?
பிரசன்னா, சினேகா ஜோடி!
நடிகைகளிடம் அரசியல் பாடம் படிக்கும் ரஜினி!
அரசியலில் குதிக்கும் ரஜினியின் ஆர்வத்துக்கு கொரோனா தடை போட்டாலும், அவர் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதை நிறுத்தவில்லை. இந்நிலையில், அவருக்கு இலவசமாக சில ஆலோசனைகளை சூமோட்டா'வாக வழங்க நமது திரையுலக அரசியல் பிரபலங்கள் முன்வந்தால் எப்படி இருக்கும்? போயஸ் கார்டனில் அவரை சந்தித்து தங்கள் ஆலோசனைகளை அள்ளி வழங்க வரிசை கட்டியவர்களின் முதல் என்ட்ரி குஷ்பூ.
அதிக முறை சிகரம் தொட்ட செர்பா!
புதிய தொடர்-உலகம் போற்றும் பெண்கள் -1
செல்வ வளம் தரும் லட்சுமி பூஜை!
செல்வம் தருகின்ற தேவி என்பதால் மகாலட்சுமி தேவியை ஸ்வர்க்க லட்சுமி, நாகலட்சுமி, ராஜ்ய லட்சுமி, கிருஹலட்சுமி என்று பல விதமாகப் போற்றுவர். இந்த தேவியே யாகத்தில் தட்சிணா ரூபிணியாகவும், தாமரையில் அழகாகவும் சந்திரனிடத்தில் நிலவாகவும் சூரியனிடத்தில் சக்தியாகவும் இருக்கின்றாள் என்று தேவிபாகவதம் கூறுகிறது.
குழந்தை வளர்ப்பு ரகசியம்!
நடிகை ஜோதிகா
கமல் அரசியலுக்குள் நுழைந்த பிளாஸ்பேக்!
சினிமா, டி.வி, அரசியல் என்று மூன்று குதிரைகளை பூட்டி வண்டி ஒட்டிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.
கணவருக்கும் எனக்கும் காதல்!
சமந்தா ஓபன் டாக்
உலகெங்கும் ஒளி விழா!
சூரிய வெடிப்பிலிருந்து தோன்றினாலும் பூமி இருண்டே கிடந்தது. ஒளி தோன்றிய போது தான் உயிரினங்கள் தோன்றின. அதனால் ஒளியை உயிர்கள் நேசித்தன. மனிதனும் ஒளியில் தன் வழியை கண்டான். எனவே, ஒளியை நல்ல சக்தியாகவும், இருளை தீய சக்தியாகவும் உருவகித்துக் கொண்டான். ஒளி அவனுக்கு வழி காட்டியதோடு, உணவும் ஊட்டியது. அதற்கான நெருப்பு ஒளிதான் அவனை குளிரிலிருந்தும் கொடிய விலங்குகளில் இருந்தும் காப்பாற்றியது.
'மிஸ் இந்தியா'
விமர்சனம்
சினிமாவில் எதையும் முடிவு செய்ய முடியாது! அபர்ணா பாலமுரலி!
தமிழில் '8 தோட்டாக்கள்', 'சர்வம் தாளமயம்' படங்களில் நடித்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அடுத்து சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள 'சூரரைப் போற்று' படம் தீபாவளி விருந்தாக ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது. அபர்ணாவுக்கு பாரம்பரிய இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி எல்லாம் அத்துபடி. திருச்சூரில் பிறந்த இவர் கட்டிக்கலை படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். சூரரைப் போற்று தனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அபர்ணாவுடன் ஒரு அழகிய உரையாடல்.
வெளிச்சம் நமக்குள் இருக்கு!-கத்ரீனா கைப்
இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைப். வசீகர தோற்றத்தாலும், ஜோவியலாக பழகும் குணத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
மதில் மேல் நடிகர்கள்....ரஜினி-விஜய் அரசியலில் குதிப்பார்களா?
தமிழ்நாட்டில் இரு திரையுலக பிரபலங்களின் அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் ஒருவர் ரஜினிகாந்த். அவர் சில வருடங்களுக்கு முன்பே ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் 'ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்தியாவின் மகிழ்ச்சி...காலியாக்கிய மோடியின் ஆட்சி...!
கடந்த 2012 முதல் ஐ.நா. மன்றம் உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை, சமுதாய உதவி உள்ளிட்ட 14 அம்சங்களை கணக்கிட்டு இந்த பட்டியலை அது தயாரிக்கிறது.