CATEGORIES
Categorías
மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக தேர்வு
மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு
கரோனா தடுப்புக்கு 50 சதவீதம் செலவிட அனுமதி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்து '2டிஜி' அறிமுகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
இணைய வழியில் மத்திய அமைச்சர் நடத்திய புதிய கல்விக்கொள்கை தொடர்பான கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு
மாநில அமைச்சர் பங்கேற்பது பற்றி பதில் வராததால் இந்த முடிவு என விளக்கம்
26 நாட்களுக்குப் பின் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழே குறைந்தது
ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
சிறப்பு ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயம்
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
ஆன்லைனில் சட்ட விரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்ற 3 பேர் கைது
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்று வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
குரோம்பேட்டை கல்லூரியில் அமைக்கப்படும் சித்த மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘டவ் தே' அதிதீவிர புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது
1.5 லட்சம் பேர் வெளியேற்றம். தயார் நிலையில் மீட்புப் படையினர்
விருப்ப உரிமை நிதியில் இருந்து கரோனா தடுப்பு பணிக்கு ஆளுநர் புரோஹித் ரூ.1 கோடி
பொது நிவாரண நிதிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்
ராம்கோ சிமென்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடக்கம்
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், விருதுநகர் மாவட்டத்தில், ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் பொது மக்களின் நலனுக்காக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
பொறுமையால் கிடைத்த வெற்றி
சாக்ஷி மாலிக், வினேஷ் பொகட் போன்ற இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனைகளின் வரிசையில் இப்போது சீமா பிஸ்லாவும் இணைந்துள்ளார். டோக்கியோவில் இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சீமா பிஸ்லா.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக பரிசோதனை நடத்த வேண்டும்
உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தகவல்
சிங்கப்பூரிலிருந்து வந்த 244 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும்
சிப்காட் அதிகாரிகள் தகவல்
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆய்வு
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் கும்மிடிப் பூண்டி, பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
கரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி அனுஷ்கா தம்பதி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கடந்த வாரம் கரோனா நிவாரண நிதியாகரு.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். இதற்காக கெட்டோ எனும் இணைய தளம் மூலம் 7 நாட்கள் பிரச்சாரம் செய்தனர். இதில் முதல் பங்களிப்பாக கோலியும், அனுஷ்காவும் இணைந்துரு 2 கோடி வழங்கினர்.
கல்சா எய்ட் மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு இங்கிலாந்து பிரதமர் விருது
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 'விர்ஜின் அட்லாண்டிக்' என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவரான ஜஸ்பால் சிங், 'கல்சா எய்ட்' என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார்.
உறவினர்கள், நண்பர்கள் உதவாததால் கரோனாவில் இறந்த தாயின் உடலை தோளில் சுமந்த மகன்
இமாச்சல பிரதேசம் கான்கிரா மாவட்டம், ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12-ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது.
கரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு - தமிழகத்தில் முழு ஊரடங்கு தீவிரமாகிறது
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது டோஸ் போடும் காலம் அதிகரிப்பு - மருந்து, ஆக்சிஜன் கையிருப்பு குறித்து பிரதமர் ஆலோசனை
மே 18, 20-ல் ஆட்சியர்களுடன் கலந்துரையாடுகிறார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4.8 டன் ஆக்சிஜன் உற்பத்தி
நெல்லை அரசு மருத்துவமனைக்கு விநியோகம்
உத்தர பிரதேசம் உன்னாவ் பகுதியில் கங்கை நதிக் கரையோரம் புதைந்த உடல்கள் கண்டுபிடிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த உடல்கள் கங்கை நதியில் மிதந்து சென்றபோது பிஹார் மாநிலத்தில் பக்சர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சுமார் 72 உடல்கள் அதுபோல் மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து உ.பி. மாநில மக்கள் மீது பிஹார் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
தனி வாட்ஸ் அப் குழு அமைத்து உதவும் உ.பி. மாநில அரசின் இளம் உயர் அதிகாரிகள்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் முன்னாள் உதவி ஆட்சியர் பூஜா அக்னிஹோத்ரி. தற்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இருக்கிறார்.
நீங்கள்தான் இன்றைய சூழலில் கடவுள் - செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கிய மருத்துவமனை முதல்வர்
கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவ மனையில் சர்வதேச செவிலியர் தினத்தை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் கால்களில் விழுந்து வணங்கி கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை கரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கரோனாவால் உயிரிழப்பு
முன்னாள் சிபிஐ சென்னை அதிகாரி ரகோத்தமன் (72), கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை முகப்பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து 1.5 லட்சம் ஆக்சிகேர் உபகரணம் கொள்முதலுக்கு அரசு ஒப்புதல்
ரூ.322 கோடி செலவில் வாங்குகிறது
கரோனா நிவாரண பணிகளுக்கு சிவகுமார் குடும்பம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது