CATEGORIES
Categorías
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.
சட்டம்-ஒழுங்கில் சமரசத்துக்கு இடமில்லை: தெலங்கானா முதல்வர் திட்டவட்டம்
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று தெலுங்கு திரைப்பட பிரதிநிதிகள் குழுவினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு
41 நாள்களில் 32.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
தேர்தல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி
தேர்தல் ஆணையம் தகவல்
ம.பி., கர்நாடகம், ராஜஸ்தானின் பதில்கள் திருப்திகரமாக இல்லை: நாடாளுமன்றக் குழு
வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை என்று வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
நிதீஷ் குமாருக்கு ஆர்ஜேடி மீண்டும் அழைப்பு
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணையத் தயார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரிவித்துள்ளார்.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 253 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.27) நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து கலந்தாய்வு மூலம் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்
தமிழகத்தில் மேலும் இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி: காவல் ஆணையர்
வழக்கில் கூடுதலாக 4 பிரிவுகள் சேர்ப்பு
வளர்ந்துவரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்
'நாட்டின் இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெஷின் லேர்னிங்' போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவர்களாக தயார்படுத்த வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி!
ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். ‘அசுரவித்து’ என்னும் எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம்.
பேறு கால உயிரிழப்பு 17% குறைந்தது: மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது கல்வித் துறை உத்தரவு
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பல்கலை.களில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
உயர்நீதிமன்றம் உத்தரவு
20 ஆண்டுகளாகியும் ஆழிப் பேரலையின் மாறாத சோக நினைவுகள்
ஆழிப்பேரலையில் உயிரிழந்தோருக்காக 20-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து பேரணியாக வந்து சுனாமி ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மலர் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் திமுக உறுப்பினர் அல்ல
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் திமுக உறுப்பினர் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சிபிஐ விசாரணை தேவை
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலை. முன் போராட்டம்: அதிமுகவினர் கைது
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அண்ணா பல்கலை. முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சர்க்கரை நோய்க்கு இலவச மருத்துவ முகாம்
சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகள், சென்னை ‘ப்ரோமெட்’ மருத்துவ மனை சார்பில் வழங்கப்படவுள்ளது.
பேய் விரட்டுவதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பேய் விரட்டுவதாகக்கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.