CATEGORIES
Categorías
பிரம்மபுத்திரா குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை
ரூ.11 லட்சம் கோடியில் கட்ட சீனா முடிவு
ராமானுஜன் விருது தொகை 'சாஸ்த்ரா'-வுக்கு நன்கொடை
கும்பகோணத்தில் உள்ள 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் 'சாஸ்த்ரா' - ராமானுஜன் விருதுடன் வழங்கப்பட்ட தொகையைப் பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் அத்தொகையை 'சாஸ்த்ரா'-வுக்கே நன்கொடையாக வழங்கினார்.
வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நாகூர் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனிபா வின் நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக்கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரையாண்டில் அதிகரித்த இந்திய தேயிலை ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூர்வமாக உறுதி செய்த பைடன்
அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது.
வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பௌலர்கள் பிரிவில் அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்ற இந்தியராக, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பெருமை பெற்றார்.
இன்று தொடங்குகிறது 'பாக்ஸிங் டே' டெஸ்ட்
பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான 'பாக்ஸிங் டே' டெஸ்ட், மெல்போர்ன் நகரில் வியாழக்கிழமை (டிச.26) தொடங்குகிறது.
அகில இந்திய பல்கலைக்கழக நீச்சல்: பெங்களூரு ஜெயின் பல்கலை. சிறப்பிடம்; சென்னை பல்கலை. வெள்ளி
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் சிறப்பிடம் பெற்றது.
ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக் கொலை
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர், எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
நவீன் பட்நாயக், நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா
மத்திய அமைச்சர் கோரிக்கை
கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலயத்தில் ஜெ.பி.நட்டா வழிபாடு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தில்லியில் உள்ள திரு இருதய கதீட்ரல் தேவாலயத்துக்கு புதன்கிழமை வருகை தந்த மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, அங்கு வழிபாடு மேற்கொண்டார்.
நேரு குடும்பத்துக்காக அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்
ஃபட்னவீஸ் குற்றச்சாட்டு
‘தேசமே முதன்மையானது’ என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்
நாட்டு மக்களுக்கு தன்கர் வலியுறுத்தல்
வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி
வாஜ்பாய் கண்ட கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தெற்கு மத்திய ரயில்வேயில் 1,839 பணியிடங்கள் குறைப்பு
தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட 88,000-க்கு மேற்பட்ட பணியிடங்களில் 2 சதவீதமான 1,839 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்படுகின்றன.
காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது.
மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமனம்
மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை: சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு
இன்று மண்டல பூஜை
அமைதி மீட்டெடுப்பு, நக்ஸல் எதிர்ப்பில் சிறந்து விளங்கும் சிஆர்பிஎஃப்: அமித் ஷா
'ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிர்ப்பிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சிறந்து விளங்குகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக 486 கூட்டுறவு சங்கங்கள்
புதிதாக உருவாகப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சார்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்
அமித் ஷா தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் புதிதாக 486 கூட்டுறவு சங்கங்கள்
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
திமுக அரசு நாடகம்
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் மூலம் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர்
பாலியல் வன்கொடுமைக்கு மாணவி உள்ளான புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்; தனிப்பட்ட மாணவி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் அதை அரசியலாக்க முயற்சி செய்கின்றனர் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.