CATEGORIES
Categorías
அமைதி மீட்டெடுப்பு, நக்ஸல் எதிர்ப்பில் சிறந்து விளங்கும் சிஆர்பிஎஃப்: அமித் ஷா
'ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிர்ப்பிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சிறந்து விளங்குகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக 486 கூட்டுறவு சங்கங்கள்
புதிதாக உருவாகப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சார்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்
அமித் ஷா தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் புதிதாக 486 கூட்டுறவு சங்கங்கள்
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
திமுக அரசு நாடகம்
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் மூலம் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர்
பாலியல் வன்கொடுமைக்கு மாணவி உள்ளான புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்; தனிப்பட்ட மாணவி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் அதை அரசியலாக்க முயற்சி செய்கின்றனர் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
என்டிஏ தலைவர்கள் தில்லியில் ஆலோசனை
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒரு நூற்றாண்டுத் தியாக வரலாறு
விடுதலைக்குப் பின்னர் தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளுக்காகவும் சுரண்டலை எதிர்த்தும் - தீண்டாமை, ஜாதி - மத உயர்வு தாழ்வுகளுக்கெதிராகவும் பெண்ணடிமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் போராடியும் வருகிறது கம்யூனிஸ்ட் இயக்கம்.
சந்தையின் மன்னர் நுகர்வோரா?
நுகர்தல் என்றால் உபயோகித்தல் என்று பொருள்படும். பொருள்களை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவர்களும், கட்டணம் செலுத்தி சேவையைப் பெறுபவர்களும் நுகர்வோர் என்ற வரையறைக்குள் வருகின்றனர்.
மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய்: முதல்வர் புகழாரம்
'நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக் காத்தவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மாணவி வன்கொடுமை: தலைவர்கள் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராணி வேலுநாச்சியாரின் வீரத்தை போற்றுவோம்
ராணி வேலுநாச்சியார் வீரத்தைப் போற்றுவோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
கீழ்வேளூர் அருகே கீழவெண்மணி கிராமத்தில் 56-வது தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை தாமதம் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்களுக்கு அதிமுக சார்பில் சிறப்பு தொகுப்பு
எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய பாஜக அரசை வலியுறுத்தாதது ஏன் என்று பாமக-வுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கத்தியுடன் சுற்றித் திரிந்தவர் கைது
செங்குன்றம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
மது போதையில் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
சென்னை பெரம்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.
ஆயுர்வேத மையத்தில் நோயாளியின் நகை திருட்டு: 2 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்க நகையை திருடியதாக பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழிசை
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை மாநில முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது; 45 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாக 33 பேரை போலீஸார் கைது செய்தனர். 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம்
மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து மதுரவாயலில் வியாபாரிகள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
வாடிக்கையாளர்களிடம் ரூ.4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி: பெண் கைது
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டிக்காக பணத்தை பெற்றுக்கொண்டு ரூ.4.25 கோடியைச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பெசன்ட் நகர் தேவாலயத்தில் அண்ணாமலை பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார்.
சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு
மழைப்பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் பரவலாக மழை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.
செங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம்: ஆவடி காவல் ஆணையர் ஆய்வு
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர், கூடுதல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானில் பணியிடை பயிற்சி
சென்னை திரும்பிய அரசு கல்லூரி மாணவிகள் பெருமிதம்
பெங்களூரு - பிரயாக்ராஜுக்கு இன்று சிறப்பு ரயில்
கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருலிருந்து பிரயாக்ராஜுக்கு வியாழக்கிழமை (டிச. 26) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
காஞ்சி மகா பெரியவர் சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் தொடக்கம்
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.