CATEGORIES
Categorías
போராடும் விவசாயிகளுடன் பேச்சு: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
பஞ்சாப் மாநில எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பிடிவாதப் போக்கை விடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அல்லு அர்ஜுனிடம் 3 மணி நேரம் விசாரணை
புஷ்பா-2 படத்தின் சிறப்பு திரையிடலின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
'செட்' தேர்வு டிஆர்பி மூலமே நடத்தப்படும்
மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கொண்டுள்ளது என்றும், பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் மாநில தகுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் வழியில் அமைதிப் பேச்சு: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
'இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெடுத்த நடவடிக்கை தோல்வியடைந்திருந்தாலும், அவரது வழியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் முயற்சிக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆலோசனையைப் புறக்கணித்து முன்கூட்டியே தீர்மானம்: கார்கே, ராகுல் அதிருப்தி
தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வில் பரஸ்பர ஆலோசனை புறக்கணிக்கப்பட்டு, அந்தப் பொறுப்புகளில் யாரை நியமிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்வுக் குழு கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்
குற்றவியல் வழக்குகளிலும், விசாரணை நடைமுறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை இயன்றளவு அதிகரிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு: வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு
பொங்கல் மற்றும் தமிழர் திருவிழாவையொட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையுடன் 5 மணி தரவை ஒப்பீடு செய்வது தவறானது காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் பதில்
'இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையுடன் 5 மணி நிலவர வாக்காளர்களின் வாக்குப் பதிவு தரவுகளை ஒப்பீடு செய்வது தவறானது' என்று காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
எதிர்வரும் 2025-26 மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரபல பொருளாதார நிபுணர்கள் மற்றும் நீதி ஆயோக் அமைப்பின் பல்வேறு துறைகளின் வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
துணைவேந்தர்கள் நியமனம் தாமதம்; ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநர் குறுக்கீடு செய்வதால் துணைவேந்தர்கள் நியமனம் தாமதமாகுவதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை:
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசு மேலும் ரூ. 1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்
மத்திய அரசு பள்ளிகளில் 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது
தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
கன்னியாகுமரியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மூளை தண்டுவடக் கட்டி பாதிப்பு: சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்
குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் மூளை தண்டுவடக் கட்டி (ஸ்பைனா பைஃபிடா) பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம் சென்னை, தரமணியில் உள்ள விஹெச்எஸ் மருத்துவமனை அபிமன்யு பிளாக்கில் வரும் சனிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது.
திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு
திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
ஐஸ்கிரீம்: ஆவின் சலுகை அறிவிப்பு
பண்டிகை தினங்களை முன்னிட்டு 'மேங்கோ' மற்றும் 'கிரேப் டூயட்' வகை ஆவின் ஐஸ்கிரீம் இரண்டு வாங்கினால் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ பீங்கான் மணி
வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்து சோடினை பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களாலான நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
வன்னியர்கள் மீதான வன்மப் போக்கை திமுக அரசு கைவிட்டு, அவர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை
'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு ரூ. 3.26 கோடி நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ஆவடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி சாலையில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.
குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்
கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவப் பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.1.22 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை
களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸார்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.