CATEGORIES
Categorías
ஜன. 7-இல் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன. 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் ஆட்சியரக நூலகத்தில் புத்தகக் கண்காட்சி
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தில் புத்தகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
கிறிஸ்துமஸ்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 46 பேர் மரணம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசு புதன்கிழமை தெரிவித்தது.
ம.பி. நதிகள் இணைப்புத் திட்டம்
பிரதமர் மோடி அடிக்கல்
கஜகஸ்தானில் விமான விபத்து: 38 பயணிகள் உயிரிழப்பு
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் புதன்கிழமை தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானதில் 38 பயணிகள் உயிரிழந்தனர்.
டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ்: ஆளுநர்கள், முதல்வர் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை
அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 500 கோடி டாலர் (சுமார் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
38 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!
கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்க விருக்கிறது.
பிப்ரவரி 23-இல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
துபையில் சந்திக்கின்றன
தேசிய பாட்மின்டன் போட்டி: எம்.ரகு, தேவிகா சிஹக் சாம்பியன்
கர்நாடகத்தில் நடைபெற்ற 86-ஆவது சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், கர்நாடக வீரர் எம்.ரகு, ஹரியாணாவின் தேவிகா சிஹக் ஆகியோர் தங்களது பிரிவில் செவ்வாய்க்கிழமை வாகை சூடினர். இருவருக்குமே இது முதல் தேசிய சாம்பியன் பட்டமாகும்.
இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்!
டிசம்பர் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது.
ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்
நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: ஒவைசிக்கு நீதிமன்றம் சம்மன்
நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது தொடர்பான வழக்கில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரப்பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
குஜராத்: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
மும்பையின் தாதர்-குஜராத்தின் போர்பந்தர் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு: ‘கும்பகர்ண’ உறக்கத்தில் மத்திய அரசு
ராகுல் காந்தி விமர்சனம்
ஜன.28-இல் மாதபி, மஹுவா ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
பங்குச்சந்தை ஒழுங்கு காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அவரையும், புகார் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவரையும் ஜன.28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இளைஞர்களுக்கு வழிகாட்டும் வாஜ்பாயின் லட்சியங்கள்
மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் தேச பங்களிப்பும் அவரது லட்சியங்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்
கேரள அமைப்புகள் விமர்சனம்
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 5 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 5 வீரர்கள் காயமடைந்தனர்.
அமித் ஷா ராஜிநாமா செய்யக் கோரி டிச.30- இல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து குறிப்பிட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ராஜிநாமா செய்யக் கோரி டிச.30-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
வேலைக்கு விண்ணப்பம்: பெண்களின் பங்கு 40%-ஆக அதிகரிப்பு
நிகழாண்டில் பெறப்பட்ட மொத்தம் 7 கோடி வேலை விண்ணப்பங்களில் 40 சதவீதம் பெண்களுடையது (2.8 கோடி) என்றும் இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளி யாகியுள்ளது.