CATEGORIES
Categorías
ராமநாயக்கவின் கட்சி உதயமானது வடிவேல் சுரேஷும் தாவினார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான 'ஐக்கிய ஜனநாயக குரல்' என்ற புதிய அரசியல் கட்சி, கொழும்பில் புதன்கிழமை (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
'வானத்தில் பாலம்' மூடப்படும்
பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் காணப்படும் 'வானத்தில் பாவம்” என்றழைக்கப்படும் ஒன்பது வளைவு பாலத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித புதைகுழி 'ஸ்கேன்' ஆரம்பம் முழுத் தடை விதிப்பு
நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களைப் பிரித்தெடுத்தல், புதைகுழியைச் சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
நூரளை தபால் நிலையத்தை விற்பது இடைநிறுத்தம்
கடந்த 130 வருடங்கள் பழைமையான நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தைத் தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காகப் பிரத்தியேகமாக வைத்திருக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
21/4 விசாரணைக்கு வத்திக்கான் ஆதரவு
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev.Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (09) சந்தித்தார்.
“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி
வடக்கு ஆபிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?
இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்
கொரியயாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்
அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”
2028ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்குக் காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
சட்டத்தரணிக்கு எட்டு வருட கடூழிய சிறை
காணி உறுதிகளை தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, அவருக்கு செவ்வாய்க்கிழமை (08) அன்று 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்
கடந்த ஆட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“அது பொய்”
அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எங்கள் அரசாங்கமும் ‘51/1க்கு எதிர்ப்பு”
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
தீர்மானம் 51/1
'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான தீர்மானம் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதியன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வெற்றி நமக்கே”
இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'சந்தாவை நிறுத்து”
மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.