CATEGORIES
Categorías
பன்றிகளுக்கு சுகாதார சான்றிதழ் அவசியம்
பன்றிகளுக்குப் பரவி வரும் வைரஸ் நோய் காரணமாக, பன்றிகளைக் கொண்டு செல்வதற்கு, சுகாதார சான்றிதழ் கட்டாயமாக்க, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேங்காய் விலை எகிறியது
சந்தையில் தேங்காயின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
"IMFஉடன்படிக்கையில் திருத்த முடியாவிடின் எம்மால் திருத்த முடியும்”
எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொண்ட உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெருந்தோட்ட பாடசாலைகளைத் தரமுயர்த்தும் நன்கொடையை இரு மடங்காக அதிகரித்தது இந்தியா
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டனர்.
கொழும்பில் டெங்கு அதிகம்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக இம்மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை 1,874 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
“பலமான கூட்டணி எமது கூட்டணி"
தமிழ் மக்களுக்குத் தேசிய இனப் பிரச்சினை என்றொன்று இல்லையென அரசாங்கம் கூறிக் கொண்டுள்ள நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியைத் தவிர ஏனையவர்கள் தேசிய இனப் பிரச்சினை இல்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வன்னி வாக்கெடுப்பு: இன்று பரிசீலனை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திற்கான வாக்கெடுப்பை இடைநிறுத்தி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை(22) பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (21) தீர்மானித்துள்ளது.
முடிவுக்கு வந்தது கடவுச்சீட்டு பிரச்சினை
விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
2 சொகுசு வாகனங்கள் கண்டியில் சிக்கின
கண்டி, அனிவத்த பிரதேசத்தில் முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான BMW ரக கார் மற்றும் பிராடோ ரக ஜீப் ஒன்றை கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
“தவறான முயற்சி"
கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை தெரிவித்துள்ளார்.
“ரவியை நீக்கு"
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்தார்.
“தடுக்க முயற்சி"
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : மாநிலமாக மாற்றப்படும்?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
பங்களாதேஷ், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியானது மிர்பூரில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு நேதன்யாகு : எச்சரிக்கை
பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவை வென்ற நியூசிலாந்து
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பெங்களூருவில் புதன்கிழமை (16) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (20) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்றது.
இடையூறு விளைவித்த வர்த்தகர் கைது
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் வருமான பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்து நகரசபை வாகனம் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகர் ஒருவர் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
வலுவூட்டுவதே இன்றைய தேவை”
நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமாக காணப்படும் பெண்களை பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாகவும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க கூடியவர்களாகவும் வலுவூட்டுதல் இன்றைய அவசிய தேவையாக உள்ளது என நெப்ஸோவின் கற்பிட்டி இணைப்பாளர் கலாபூஷணம் ஜே.பத்மநாதன் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற 63 வயதான அதிபருடன் 21 வயதான இளைஞன் ஓரினச்சேர்க்கை
ஏறாவூரில் ஓய்வு பெற்ற 63 வயதான அதிபர் ஒருவருடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட 21 வயதான இளைஞன், அதனை வீடியோவாக எடுத்து அவரிடம் அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் கோரியிருந்த நிலையில், அவ்விளைஞன், சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
“இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது”
அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன்"
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன்.
முகப்புத்தக களியாட்ட நிகழ்வு 30 பேர் போதையுடன் கைது|
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பயணிக்கும் பாதை அவ்வளவு நல்லதல்ல”
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செல்லும் இந்த பாதையை பார்க்கும் போது மக்கள் மீண்டும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்பது தெளிவாகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஒரு குடும்பமே தீயில் கருகியது
சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டும்”
எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த செய்திகள் நம்பிக்கை தருவதாக இல்லை.
அரச வாகனங்கள் ஒப்படைக்கிறார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஆறு உத்தியோகபூர்வ வாகனங்களில் அம்பியூலன்ஸ் உட்பட மூன்று உத்தியோகபூர்வ வாகனங்கள் திங்கட்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்ப டவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“கைதுக்கு அஞ்சேன்"
இரு அறிக்கைகளையும் இன்று அம்பலப்படுத்துவேன்
ரத்து செய்ய முடியும்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்தால், நியாயமான காரணத்திற்காக வரி செலுத்த போதுமான வருமானம் அல்லது இலாபம் இல்லை என்றால், அந்த வருமான வரி செலுத்தும் பதிவை ரத்து செய்ய முடியும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா பாண்டுசேகர தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப முடியும்”
சர்வஜன அதிகாரத்தால் மட்டுமே துணிச்சலான வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப முடியும் என அதன் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.