CATEGORIES
Categorías
பிரபல விளையாட்டு வீராங்கனை அரசியலில் நுழைகிறார்
தங்கள் கட்சியில் வந்து சேருமாறு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழுத்தம் வருவதாக பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
"பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வரவேண்டும்”
திரைத்துறையில் பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வரவேண்டும் என நடிகையும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முடிவுக்கு வரும் ஆண் இனம்?
ஆண்களிடம் காணப்படும் 'லு குரோமோசோம்கள்' மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
'Bikethon 2024' சைக்கிள் கூவாரி
தற்கொலை எண்ணங்கள் அல்லது செயல்களுக்கு இட்டுச் செல்லும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளால் அவதிப்படுபவர்களுக்கு அதற்கான பதிலைப் பெற வழிவகுக்கும் வகையில், இலவச 1333 தொலைபேசி இலக்கம் மற்றும் சேவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'Bikathon 2024' என்ற துவிச்சக்கரவண்டி சவாரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை(29) முதற்கட்டமாக ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை எதிர் இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் இன்று வியாழக்கிழமை (29) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.
பதில் கடிதத்தில் சஜித்துக்கு அனுப்பியது கஜேந்திரன் அணி
நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கு முன்னணியின் பதில் கடிதம் புதன்கிழமை (28) அனுப்பிவைக்கப்பட்டது.
“எம்.பிக்களுக்கு நேரடியாக பணம் கிடைக்காது"
அபிவிருத்தி பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாகக் கொடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இஞ்சி ரூ.3,200
இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளதால் நுகர்வோரின் தேவை குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் ரணிலின் தகுதியை சவால் செய்யும் மனு நிராகரிப்பு
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை: மருத்துவர்கள் எச்சரிக்கை
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால், தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"இன்னும் கொஞ்சம் தூரத்திற்கு செல்வோம்"
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான நாளை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணிக்கும் இந்த கடினமான பொருளாதார பாதையில் இன்னும் கொஞ்சம் தூரத்திற்குச் செல்ல வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“கிழக்கு மண்ணுக்கு ஹக்கீம், ரிஷாத் வேண்டாம்”
\"ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்” என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஜே.வி.பிக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள்”
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியைச் சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள்.
செப்டெம்பரில் புதிய தீர்மானம் வருகிறது
பொருளாதார சீர்திருத்தங்கள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பங்காளிகளுக்குக் காண்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
"தனி நபர்கள் உரிமை கொண்டாட முடியாது"
கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம், நமது கட்சி போராடி பெற்றுக்கொண்ட கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு உரிய கௌரவமாகும்.
“திருடர்களின் ஆதரவில்லாமல் பொறுப்புக்களை கையேற்பேன்"
எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரைப் போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தைப் பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை (28) ஈடுபட்டனர்.
'ஹலோ' தவிர பேசியவை பொய் பொத்துவிலில் எம்.பியை சாடினார் ரிஷாட்
இஸ்லாத்தின் நம்பிக்கைகளை ஏளனம் செய்த. முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்
ஆட்சி மாற்றத்துக்கு பின்னரும் தொடரும் போராட்டங்கள்
பங்களாதேஷில் பல்வேறு அமைப்புக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக் குழாமில் பெயார்ஸ்டோ மொயின் இல்லை
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்துக் குழாமில் ஜொனி பெயார்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் இடம்பெறவில்லை.
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
குடும்பத் தகராறில் கணவன், மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிக்கு வலை
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கழிவறை கூரையை உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (26) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
“ரணில் இல்லையேல் வரிசையில் இணையும்”
அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால், வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டு, மதத் தலங்கள் தாக்கப்பட்டு, நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அரசியலமைப்பு எரிக்கப்பட்டு, இரத்தம் நிறைந்த மற்றொரு பங்களாதேஷாக இலங்கை மாறுமென தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, உலகின் அழிவடைந்த நாடுகள் வரிசையில் இணைந்துகொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
டயனாவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
ரணிலின் அழைப்பு; ரஞ்சித் இணக்கம்
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ளத் தான் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
700 வேட்பாளர்கள் பறந்து விட்டனர்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 மாதங்களில் 341 மீனவர்கள் சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மானியங்கள், சம்பள உயர்வுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களைத் தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டுகின்றது.
நல்லூர் தீர்த்தத்துக்கு 'விடுமுறை' கோரிக்கை
நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌசிக்கு சிறை
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.