CATEGORIES
Categorías
"துரோகிகளை தண்டிக்கத் தயங்காது”
சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மூன்று பிரதான வேட்பாளர்களிடமும் “சமதூர பேச்சு"
பாராளுமன்றத் தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது, தற்போது ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது, இதில் யாருக்கு ஆதரவளிப்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மு.கா. தேசிய பிரசார செயலாளர் இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்த செய்யப்பட்டுள்ளார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
"ஒளிந்து விளையாட இடம் கிடையாது"
சஜித் பிரமதாசவை ஜனாதியாக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்த பிற்பாடு அதில் ஒளிந்து விளையாடுவதற்கு யாருக்கும் இடம் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காங்கிரஸின் பிரசாரம் 30ஆம் திகதி ஆரம்பம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
'சாபக்கேட்டுக்கு முடிவு கட்டுவோம்”
இலங்கை நாட்டின் 76 வருட காலமாக நாட்டைப் பீடித்துள்ள பிரபுக்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.
சதுரங்கத்தில் - கிழக்கு மாகாண சம்பியன்களாக கல்முனை சாஹிரா தடம்பதிப்பு
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்துக்கான சதுரங்க போட்டி திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றபோது ஆண்களுக்கான 20 வயது பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மாணவன் எம்.ஏ.தமீம் சம்பியனாகவும், ஆண்களுக்கான 17 வயது பிரிவில் எம்.இசட்.
விஜய் கட்சி கொடிக்கு திடீர் சிக்கல்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவருமான விஜய் வியாழக்கிழமை (22) பனையூரில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்றில் எலித் தொல்லை
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறும் கட்டடத்தில் எலித் தொல்லையால் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குருதி அழுத்த கண்காணிப்பு கருவிகள் அன்பளிப்பு
Terumo Corporation அதன் விநியோக பங்காளரான ஹேமாஸ் சேர்ஜிகல் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் உடன் இணைந்து, Nissei DS-11 குருதி அழுத்த கண்காணிப்பு கருவிகளை இலங்கை இதய நோயியல் வைத்தியர் நிறுவகத்துக்கு அன்பளிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
"21 வெற்றி உறுதி”
தேர்தலில் சிலர் -முன்கூட்டியே வெற்றி பெற்றாலும், ரணில் விக்ரமசிங்ஹ சந்தேகத்திற்கு இடமின்றி செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றியீட்டுவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார, வியாழக்கிழமை (22) இடம்பெற்ற வடிவேல் சுரேஷின் பதவியேற்பு நிகழ்வின் போது தெரிவித்தார்.
தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன்
இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்றுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை - விரைவில் நடத்த உத்தரவு
பலரைப் பிரதிவாதிகளாகப் பெயரிட்டு மனுதாரர்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
‘AI தொடர்பான மாணவர் சங்கங்கள்'
100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டமாகச் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சி தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு உட்பட ஆளுநர்கள் ஐவர் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை
நாட்டில் உள்ள ஒன்பது மாகாண ஆளுநர்களில் நான்கு ஆளுநர்கள் மாத்திரமே இதுவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவித்துள்ளனர்.
யாழில் எரிபொருள் நிரப்பும் ஊழியர் மீது வாள்வெட்டு
யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடையின்றி தோசை சுட்டதால் வழக்கு
கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பஸ்ஸை விட்டுவிட்டு ஜோடியாய் ஓடிய டயர்கள்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றின் பின்பக்க ஜோடி டயர்கள், பஸ்ஸை விட்டுவிட்டு 100 அடி தூரத்துக்கு உருண்டோடி புரண்டுகொண்டதுடன், டயர்களுக்கு முன்பாக டயர்கள் இன்றி நொண்டியடித்துக் கொண்டு ஓடிய பஸ், சுமார் 50 அடி தூரத்தில் வீதியிலேயே நின்றுகொண்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்க மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (22) அன்று உத்தர விட்டுள்ளார்.
“2025 இல் சம்பள அதிகரிப்பு"
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி சேவையில் உள்ள சம்பள வழங்கியுள்ளதாக அரச முரண்பாடுகளை தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்.
"நாடெங்கும் நமது கொடி பறக்கும்”
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்.
ஹொக்கி போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு டையலான ஆண், பெண் இருபாலாருக்குமான ஹொக்கி போட்டிகள் திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.
பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரயிலில் பயணம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ளார். அங்கிருந்து அவர் உக்ரைனுக்கு ரயிலில் செல்லவுள்ளார்.
யாத்ரீகர்கள் 35 பேர் பலி
பஸ் கவிழ்ந்ததில் பாகிஸ்தான்
சுகாதாரத்துறைக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மாகாண சுகாதார அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
வழங்கவும் இல்லை; சிபாரிசும் இல்லை
நான் எந்தவொரு நபருக்கும் மது வரி அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை அல்லது யாருடைய பெயரையும் வழங்க சிபாரிசு செய்யவில்லை என அரச தரப்பின் பிரதம கொரட்டா மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பராட்டே கைவிடப்பட்டால் நிவாரணங்கள் தொடருமா?
பராட்டே சட்டமூலம் கைவிடப்பட்டாலும், அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடருமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
"சூதாட்ட, கறுப்புப் பணம் விளையாடுகின்றது"
ஜனாதிபதித் தேர்தலில் கறுப்புப் பணம், பாதாள குழுக்களின் பணம், போதைப் பொருள் பணம் மற்றும் சூதாட்ட பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
8 இல் ஐ.தே.க.; 9 இல் ஐ.ம.ச.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதன்கிழமை (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.