CATEGORIES
Categorías
கடுமையான வெப்பத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
உப்பு, சீனியில் பிளாஸ்டிக்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சீனி மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை
திரையரங்கில் ஏற்பட்ட மோதலில் தனுஷ் ரசிகரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் 1,000 சதுர கிலோ பரப்பு உக்ரைன் வசமானது
கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முன்னேறினார் றோஹித் ஷர்மா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
சமத்துவக் கட்சி இருவரையும் சந்தித்தது
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையில் தனித்தனியாகச் சந்திப்புகள் நடந்துள்ளன.
நாமலுக்கு கோட்டா ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இளவாலையில் மூன்று பபுகுகளுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பாரிய வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ரூ.1,700க்கான வர்த்தமானி தமிழில் வெளியாகவில்லை
தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாவை வழங்குவதற்கான 239727 என்ற இலக்கத்தை கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (13) அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
30 பேரடங்கிய அணி ஜனாதிபதிக்கு ஆதரவு
30 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்சன யாப்பா, புதன்கிழமை (14) தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனுத்தாக்கல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை புதன்கிழமை (14) தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்ய “வாய்ப்பு கிட்டியது”
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கையொப்பம் இட்டனர்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தொழில் அதிபரான திலித் ஜயவீர ஆகியோர், ஜனாதிபதி வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டனர். புதன்கிழமை(13), பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க, தன்னுடைய வேட்பு மனுவில், செவ்வாய்க்கிழமை (12) கையொப்பமிட்டார்.
2024 ஜனாதிபதித் தேர்தல் இன்று வேட்புமனு; 40 பேர் கட்டுப்பணம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பெண் மருத்துவர் கொலை: போராட்டம் தீவிரம்
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாண்டில் எஞ்சியுள்ள அனைத்து டெஸ்ட்களிலும் ஷகிப் விளையாடுவார்
இவ்வாண்டு நடைபெறவுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் விளையாடுவாரென தலைமைத் தேர்வாளர் கஸி அஷ்ரஃப் ஹொஸைன் திங்கட்கிழமை (12) தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸை விவாதத்திற்கு அழைத்த எலான் மஸ்க்
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்வதற்கு தயார் என எலா மஸ்க் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: உறுதி செய்தது நாசா
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் திரவ வடிவில் தண்ணீர் உள்ளதாக நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 'கியூடெங்கா' தடுப்பூசி
டெங்கு நோயை குறைப்பதில் 'கியூடெங்கா’ தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் மேல் பலனளிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை அல் மிஸ்பாஹ் ம.வி மாணவன் தேசியத்துக்கு தெரிவானார்
அஸ்ஹர் இப்றாஹிம் இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கத்தால் நாடு பூராக நடைபெறும் 53ஆவது சேர் ஜோன் ட்ராபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
அல்வரேஸைக் கைச்சாத்து
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ஜூலியன் அல்வரேஸை ஆறாண்டு ஒப்பந்தமொன்றில் 81.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திடுவதை ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் பூர்த்தி செய்துள்ளது.
“கிழக்குப் பறிபோவதை வேடிக்கை பார்க்காது வடக்கு”
கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது\" தமிழரின் வரலாற்றுத் தொன்மையைச் சீரழிக்கும் நடவடிக்கையை ஆளுநர் தொடர்ந்தால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஸ்டார்லிங்க்குக்கு இணையச் சேவை அனுமதி
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு \"தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதிப் பத்திரத்தை வழங்கத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீர்க்கட்டணத்தில் திருத்தம்
தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
செந்தில் விடாபிடி; 16 இல் முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் 16ஆம் திகதியன்று கூடவிருகின்றது.
பச்சை இஞ்சி இறக்குமதி
அடுத்து வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் 3,000 மெற்றிக்தொன் பச்சை இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விமல் அணியின் எம்.பி. ரணிலுடன் இணைந்தார்
தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட தலைவரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை திருத்த அங்கீகாரம்
அரச சேவையின் சகல துறைகளிலும் சம்பள திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
லயின் வீடுகளில் வசிப்போருக்கு 'ஆறுதல்' அஸ்வெசும
லயின் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 'ஆறுதல்' (அஸ்வெசும) முன்மொழிவுத் திட்டத்துக்கு உள்வாங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதிக்கு ராஜித் ஆதரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.