CATEGORIES
Categorías
சஜித்தின் வெற்றிக்காக புதிய கூட்டணி உதயம்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்
2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரானார் டிம் வோல்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 60 வயதான டிம் வோல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 2024: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை தவறவிட்ட அருண தர்ஷன
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை இலங்கையின் அருண தர்ஷன தவற விட்டுள்ளார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராகிறார் முகம்மது யூனுஸ்
பங்களாதேஷில் இடைக்கால அரசுக்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய றோஹித்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்திய அணித் தலைவர் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
“மக்கள் முட்டாள்கள் இல்லை”
எவ்வித கொள்கையும் இல்லாமல் கட்சிமாறி செயற்படுபவர்கள் கூறுவதனை கேட்பதற்கு மக்கள் முட்டாள்களல்ல.
பதில் இன்றேல் இரத்து செய்யவும்
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்குக் கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை ஒன்று பதிலளியுங்கள்,இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
என் மீது அவதூறு கூறுகின்றனர்
அரசியலில் தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் தன்னைப்பற்றி அவதூறான வகையில் இணையத்தளங்களில் எழுதுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிறுத்த முயற்சி
வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
சஜித் அணியுடன் தயாசிறி கைகோர்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
1,700 ரூபாய் வேண்டும்’ 'வாக்குறுதியை நிறைவேற்றுவேன்'
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி, முன்னதாக வாக்குறுதி அளித்தவாறு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன்
‘அரகலய'வினருக்கு மொட்டு அழைப்பு
'அரகலய' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை, தமது கட்சி சார்பில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.
ஆடையின்றி புகழ்பாடுகின்றனர்
ரணில் விக்ரமசிங்கவை சிறைக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம் என சூளுரைத்தவர்கள் இன்று ஆடையில்லாமல் ரணில் புகழ்பாடுகிறார்கள்.
"ரணிலுடன் இணைந்த மொட்டுக்கள் அஞ்சுகின்றன”
மொட்டுக் கட்சியிலிருந்து ரணிலிடம் சென்று சரணடைந்தவர்கள், அந்தக் வேட்பாளராக நாமல் கட்சியின் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்துபோய் இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
பின்வாங்கினார் தம்மிக்க; முன்வந்தார் நாமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது மொட்டு
நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பெயரிட்டுள்ளது.
யாழுக்கு நேரடி விமான சேவை
யாழ்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
திரும்பி வாருங்கள் நாமல் அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணையுமாறு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் "எனக்கு போட்டி இல்லை"
என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் தனக்கு ஒரு போட்டி அல்ல, நான் யாரிடமும் சண்டையிடவரவில்லை தான் தனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைத்தளத் தாக்குதலில் பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது செவ்வாய்க்கிழமை (06) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவை வெல்லுமா இந்தியா?
இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
‘தளபதி 69’ படத்தில் 23 வயது நாயகி?
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு உ விரைவில் தொடங்க உள்ளது.
வரி செலுத்தாதவர்களுக்கு பகிரங்க அறிவித்தல்
நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தைச் செலுத்தாதவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப் போவதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளது.
“நிரந்தர தீர்வு வேண்டும்”
அண்ணாமலை தலைமையில் மனு கையளிப்பு
“விசேட வட்டியை இன்னும் வழங்கவில்லை”
ஓய்வூதியர்கள், முதியோர்களுக்கான 15 சதவீத விசேட வட்டி வீதத்தைப் பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அதனை வழங்கத் தவறிவிட்டதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
“மீட்சியாளர் அல்லர்; ரணில் பங்குதாரர்"
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் ஏனைய ஜனாதிபதித் தேர்தல்களை விட மிக முக்கிய தருணத்தைக் கொண்டமைகிறது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
பணக்காரர்களுக்கு மொட்டை “வாடகைக்கு விட முடியாது"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் இளம் பட்டதாரி தாய் மரணம்: சிலர் தவறிழைத்தமை அம்பலமானது
சிலர் தவறிழைத்தமையால், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தமை அம்பலமானது.
புதன், வியாழன் முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரைத் தெரிவு செய்வதில், திங்கட்கிழமை (05) நீண்டநேரம் விவாதம் இடம்பெற்ற நிலையில், பொது வேட்பாளர் தொடர்பான இறுதிமுடிவு புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் பொதுச்சபையின் அறிவித்தனர்.
பங்களாதேஷ் நிலைவரத்தை இலங்கையோடு ஒப்பிடுவது ஏன்?
பங்களாதேஷ் நிலைவரத்தை இலங்கையோடு ஒப்பிட்டுத் தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்பது ஏன்? அதேபோன்று இலங்கையிலும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்றா எதிர்க்கட்சியினர் கூற வருகின்றனர்? தவறான தீர்மானங்கள் மூலமே மீண்டும் நெருக்கடிகளே ஏற்படும் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.