CATEGORIES
Categorías
கணவன் சம்பாத்தியம் ஒரு பக்கம் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் ஒரு சம்பாத்தியம்தான்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டுதலுக்குரிய நல்ல தீர்ப்பு!
‘ஏடுகொண்டல வாடா!’ ஏழுமலையான் சக்தி இதுதானா?
திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது
மணிப்பூரும் சங்பரிவாருக்கு இரையாக்கப்பட்டது
மணிப்பூரில் சங்பரிவார் எதை விதைக்கிறதோ அதையே அறுவடை செய்கிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இரண்டு பிரச்சினைகள்: மலைப்பகுதியில் கசகசா சாகுபடி மற்றும் காடழிப்பு.
முதலமைச்சர் பேச்சு! இனமுரசு சத்யராஜ் வரவேற்பு!
சூலூர், ஜூன் 22 - ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக, ‘நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம்’ என முதலமைச்சர் முன் மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என திரைக்கலைஞர் சத்யராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை - சீராக இருக்கிறார்
சென்னை, ஜூன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவ மனையில் நேற்று (21.6.2023) நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது.
குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 22 - குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வரை 10,748 ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயக போர்க்களத்தில் மதவெறி பிஜேபியை வீழ்த்துவோம் இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடுவோம்
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட் டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த சட்ட எரிப்பு வீரர் சா. துரைக்கண்ணு அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி கடந்த 17.6.2023 அன்று காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.
ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட்டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த சட்ட எரிப்பு வீரர் சா. துரைக்கண்ணு அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி கடந்த 17.6.2023 அன்று காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.
ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது! தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை
கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை
அமைதியாய் இருங்கள்! மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவு
புதுடில்லி, ஜூன் 22- அமைதியை கடைப் பிடிக்குமாறு மணிப்பூர் மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளர்ச்சி நிதியில் சொந்த வீடு கட்டியதுடன், மகனுக்கு திருமணமும் செய்து வைத்த பா.ஜ.க. எம்.பி.
அய்தராபாத், ஜூன் 22 தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ், தனது மகனின் திருமணத்திற்கும், தனக்கு வீடு கட்டுவதற்கும் தனது நாடாளு மன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு மாநிலத்தில் உள்நாட்டுப் போர் போன்று எரியும் நிலையில் ‘இரட்டை என்ஜின் ஆட்சி' கவனம் தீவிரமாக வேண்டாமா?
பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? ,மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?
கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றுகிறார் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டு!
திருவாரூர், ஜூன் 21- கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டியுள்ளார்
"ஊசிமிளகாய்" எங்கள் "ஸ்டாலின்”மீது பாயும் ஆர்.எஸ்.எஸ், ஒன்றிய அமைச்சர் அறியவேண்டிய செய்தி! "
ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், தமிழ்நாட்டிற்கு நேற்று (20.6.2023) வந்து ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் – நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தூக்கி எறியப்படும்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
‘கலைஞர் கோட்டம்' திறப்பு விழா
திரூவாரூர், ஜூன் 21 - திருவாரூர் “கலைஞர் கோட்டம்\" திறப்பு விழா நேற்று (20.6.2023) காலை 9 மணியளவில் திருவாரூர் சகோதரிகளின் இசைநிகழ்ச்சியுடன் தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது
சென்னை, ஜூன் 21- சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணி சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரை கைது செய்தனர்
மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு
முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை
தமிழ்நாட்டைப்போல் இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்! கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
ஒரு பிரச்சினையில் கலைஞர் எப்படி முடிவெடுப்பார் என்று நினைத்து அதன்படி செயல்பட்டு வருகிறேன், இன்றைய சூழலில் பி.ஜே.பி. மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கேடாக முடியும்!
"கொடி - செடி - படி" எனும் முழக்கத்தை முன் வைத்த தமிழர் தலைவர்
உளுந்தூர்பேட்டை, ஜூன் 20 உளுந்தூர்பேட்டையில் ஜூன் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் வீடுகளில் கொடி ஏற்ற வேண்டும். கொடி கம்பத்துக்கு அருகில் ஒரு செடி நட வேண்டும் எனவும் . படி என்றால் விடுதலை நாளிதழ் படிக்க வேண்டும் எனவும் பேசினார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரிய கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான (முதுமக்கள்) தாழிகள் - வெண்கல வளையல்கள்
தூத்துக்குடி,ஜூன்20 - பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முது மக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்பூர் தொழில் நகரம் குடைசாய்ந்தது ஏன்? மோடி அரசே பொறுப்பு
திருப்பூர், ஜூன் 20 - திருப்பூரில் நிலவும் தொழில் நலிவுக்கு, மோடி அரசின் கொள்கைகளே காரணம். மேலும், தொழிலாளர் விரோதப் போக்கை யார் கடைப்பிடித்தாலும், அவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக போராட்டம் நடத்தும் என்று குன்னத்தூரில் தோழர் கே.தங்கவேலு நினைவகத்திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூளுரைத்தார்.
சென்னையில் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்த நவீன திட்டம்
சென்னை,ஜூன்20 - சென்னையில் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் போக்குவரத்து காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை உடனுக்குடன் சரி செய்வதில் பெரும் பிரச்சினை உள்ளது. உடனுக்குடன் போக்கு வரத்து நெரிசலை சரி செய்வதற்காக விஞ்ஞானரீதியாக புதிய திட்டங்களை போக்குவரத்து காவல் துறை யினர் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டுப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஆந்திர மாநில காவல்துறையினர் வெறியாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி., கண்டனம்
சென்னை, ஜூன்20-கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திரப் பிரதேச மாநில காவல் துறையினர் வெறியாட்டம் நடத்தியுள்ளதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் சிதம்பரம் தலைவர், தொகுதி மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, ஜூன் 20- மயிலாடுதுறை நகர திராவிடர் கழகத்தில் சார்பாக 17.6.2023 அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை சின்னக் கடை வீதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நகரத் தலைவர் சீனி. முத்து தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியங்களில் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் பெரியாரியல் பயிற்சிகளில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவு
புதுக்கோட்டை ஜூன்20- திராவிடர் கழகப் பணிகளில் ஒன்றாக தற்போது ஒன்றிய வாரியாக அந்தந்த ஒன்றியத்திற்கு கழகப் பொறுப்பாளர்கள் சென்று ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவையொட்டி நடைபெற்ற வீரவணக்கக் கூட்டம்
தருமபுரி, ஜூன் 20- தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமனின் தம்பி ஊமை.அர்ச்சுனன் மறைவுக்கு வீரவணக்கக் கூட்டம்.அர்சுனனின் திராவிடர் இயக்க ஈடுபாட்டை நினைவுறுத்தி மாவட்ட கழக செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டணியை வலுப்படுத்துவோம் பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்!-து.ராஜா பேட்டி
ராஞ்சி, ஜூன் 20- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற் கடிப்பதற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைந் துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.
திராவிடத்துத் தீரரான நம் கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்!
திராவிடத்துத் தீரர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவுகூரும் வண்ணம் - அவர் வாழ்ந்த ஊரில் ‘‘கலைஞர் கோட்டமும், கலைஞர் சிலையும்'' திறக்கப்படுவது குறித்து பெருமகிழ்ச்சியோடு, நன்றி உணர்வுடன் வீர வணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.