என்கிறார் வள்ளுவர்.
இதன்மூலம்-
பிறரைப்பற்றி ஒருவர் புறம்பேசுவதை வைத்தே, அவர், அறத்திற்கு மதிப்பளிக்காதவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.
இந்தக் குறள், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பிரதமர் மோடிக்கு மிகப் பொருத்தமான குறளாகத் திகழ்கிறது.
காரணம், பழுத்த அறநெறியாளர் போல மக்கள் முன் காட்டிக்கொள்கிற மோடி, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தனது ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, எதிர்க் கட்சிகளையும் சிறுபான்மை மக்களையும் வன்மத்தோடு விமர்சித்து வருகிறார். ஏனெனில், அவரது ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் படி சாதனைகள் எதுவும் இங்கே நிகழவில்லை.
அவரது ஆட்சியில் இந்தியாவைத் திணறவைக்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் போக்கப்படவில்லை. தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் கொஞ்சமும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை வாட்டும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எதுவும் நடக்கவில்லை. இந்தியாவின் பொருளாதார நிலை மேம்படுத்தும் முயற்சிகள் கையில் எடுக்கப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவே இல்லை. மக்களை வாட்டும் வறுமை நிலைக்கு கொஞ்சமும் விடை கொடுக்க மோடி அரசு முன் வரவில்லை.
அதனால், தனக்கு எதிராக அணிவகுக்கும் எதிர்க்கட்சிகளைத் தாக்கி வருவதோடு, அவை தாங்கிப்பிடிக்கும் சிறுபான்மை மக்கள்மீதும் தனது வன்மத்தையும் காழ்ப்புணர்வையும் தயங்காமல் உமிழ்ந்துகொண்டே இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அதில் நம் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை பங்கீடு செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே உங்கள் தங்க நகைகளை இங்கே ஊடுருவியவர்களுக்கு அவர்கள் தரப்போகிறார்கள். அதிகம் குழந்தைகளைப் பெறுகிறவர்களுக்குத் தாரைவார்க்கப் போகிறார்கள். முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் சொத்துக்கள் போகப்போகிறது? என்று யோசித்துப் பாருங்கள்' என்று இட்டுக்கட்டிப் பேசினார்.
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.