தலைவர் கலைஞர் வழியிலே சொல்ல வேண்டு மானால் போராளிக்கு சாவே இல்லை. ஆம் கலைஞர் எனும் போராளிக்கு சாவே இல்லை. தலைவர் கலைஞரை நினைக்கும் போதெல்லாம் அவர் கவிதை தேனாய் இனிக்கிறது. அவருடைய பேச்சு உணர்ச்சி மேலிடச் செய்து போர்க்களத்திற்கு செல்லத் தூண்டுகிறது. அவரது வசனங்கள் உணர்ச்சி மிகுந்து உள்ளத்தைக் கிழித்தெடுக்கிறது . அவரது சாதனைகள் வானத்தில் மின்னிடும் நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன.
சமூகமும் அவருடைய வாழ்வும் மரத்தில் சுற்றும் கொடி போல பின்னிப் பிணைந்தது. அ தைப் பிரித்தெடுப்பது என்பது வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பறித்து வருவது போலத்தான்.
அவரது வாழ்வு பூப்போன்றது அல்ல. அவரது வாழ்வு ஒரு பெரிய போர்க்களம் போன்றதுதான். ஆனால் அந்த போர்க்கள வாழ்வை பூக்களமாக நினைத்துக் கொண்டார். அதுதான் விந்தை.
கலைஞரின் நடைநயம் எப்படிப்பட்டது? பொன்னர் சங்கரில் கலைஞர் இப்படி எடுத்துச் சொல்கிறார்.
உவமைகளையும் உருவங்களையும் பொருத்தமாய் பொழிகிற நடைநயம். தொட்ட இடமெல்லாம் இப்புதினத்தில் துலங்குவதைக் காண்கிறோம்.
தாமரை நாச்சியார் தன் பிள்ளைகளை அவர்கள் தன் பிள்ளைகள் என்று அறியாமலே - காணும்போது ஏற்பட்ட மன உணர்வை கலைஞர் இப்படிக் கூறுகிறார்.
தாமரை நாச்சியார் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி கடற்கரையில் காணாமல் போய் மண்ணில் புதைந்துவிட்ட முத்துப்பதித்த கம்மல்களை எடுப்பதற்குக் கரங்களைக் கொண்டு கடற்கரை மணலைத் தோண்டுவது போல இருந்தது..
தமிழுக்கும் அமுதென்று பெயர் இதிலுள்ள நுட்பத்தை கலைஞர் தெளிவுற பெறச் சொல்கின் றார் பாருங்கள். ஏன் பாவேந்தர் தமிழுக்கு அமு தென்று பெயர் எனச் சொல்லாமல் தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று சொன்னார்? பாரதி தாசன் எதற்கு அப்படிச் சொன்னார் என்றால் அமுதுக்கு அமுதென்று பெயர். அதைத் தவிர்த்தால் தமிழுக்கும் அமுதென்று பெயர். இப்படிச் சொன்ன வுடன் கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது.
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.