CATEGORIES
Categorías
வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று வங்கதேசம் பயணம்
இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை செல்கிறார்.
சோரஸ் நிதியில் செயல்படும் அமைப்புடன் சோனியாவுக்கு தொடர்பு
பாஜக குற்றச்சாட்டு
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் பேரணி மீண்டும் தடுத்து நிறுத்தம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து தில்லி நோக்கி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேரணியாக புறப்பட்டனர். ஆனால், கடந்த முறையைப் போலவே இரும்பு தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்தியாவுடன் மீண்டும் சுமுக உறவு: வங்கதேச வெளியுறவு ஆலோசகர் நம்பிக்கை
இந்தியாவுடனான பிரச்னை களுக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் சுமுக உறவு ஏற்படும் என்று வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார்.
'வளர்ந்த பாரதம்' கனவல்ல இலக்கு
ஜகதீப் தன்கர்
கோலாலம்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை - கோலாலம்பூர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர்.
புதுச்சேரியில் மத்திய குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதுச்சேரியில் புயல், வெள்ளப் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கர்தினாலாக கேரள பேராயர்: பிரதமர் மோடி புகழாரம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர் நிலையான கர்தினாலாக (கார்டினல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைனுக்கு 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்கள்
உக்ரைனுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,467 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் சனிக்கிழமை தெரிவித்தார்.
சர்க்கரை நோய் - ரத்த அழுத்தம்: புதிய சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகளைப் பொருத்தவரை திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளை மட்டுமே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலூரில் மத்திய குழு ஆய்வு
நெய்வேலி, டிச. 8: ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம், புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
அன்புமணி ராமதாஸ் கேள்வி
மனித உரிமை ஆணையங்களின் பணி!
ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் என்பன. இவற்றோடு மனிதன் கண்ணியத்தோடு வாழ சுதந்திரம், சமத்துவம், நீதி, நன்மதிப்பு ஆகியவை முக்கியமானவை.
புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் காலமானார்
புதுச்சேரி, டிச.8: புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் (90) (படம்) வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
1.27 லட்சம் பயனாளிகள் நீக்கம்
டிச. 12-இல் வைக்கம் போராட்ட வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா
வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் தோல்வி
தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்ததால்தான் மழை நீர் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
‘தென் தமிழகத்துக்கு நீதிமன்ற அனுமதியின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்’
தென் தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, ஏற்கெனவே அனுமதித்த படி கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புயல் நிவாரணம்: விசிக ரூ.10 லட்சம் நிதி
ஃபென்ஜால் புயல்பாதிப்பை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு முகாமில் 10,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மாணவி பாலியல் வன்கொடுமை:
2 மாணவர்கள் கைது
'ஆபரேஷன் திரைநீக்கு' நடவடிக்கை: இணையவழியில் மோசடி செய்த 70 பேர் கைது
தமிழகத்தில் இணையவழியில் மோசடி செய்த சுமார் 70 பேரை 'ஆபரேஷன் திரைநீக்கு' நடவடிக்கை மூலம் போலீஸார் கைது செய்தனர்.
திருவேற்காட்டில் ரூ.3 கோடியில் புதிய சாலைப் பணி
திருவேற்காட்டில் ரூ.3 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
இலங்கை கடற்படையினரால் மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். மேலும், 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீர் ஏரிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் 72.88 சதவீதம் நீர் நிரம்பியது.
விருகம்பாக்கம் கால்வாய் பாலங்களை உயர்த்த திட்டம்! மாநகராட்சி
விருகம்பாக்கம் கால்வாயின் அரும்பாக்கம் குறுக்கே உள்ள 12 பாலங்களை உயர்த்திக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சிறப்பு மொத்த விற்பனையாளர்களை நியமிக்க ஆவின் திட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் தயிர், பன்னீர், லஸ்ஸி போன்ற பால் உபபொருள்களின் விற்பனையை அதிகரிக்க சிறப்பு மொத்த விற்பனையாளர்களை நியமிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.