CATEGORIES
Categorías

ரமலான் மாதம் தொடக்கம் பிரதமர் மோடி வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்
அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் அவதூறு: அமைச்சர் ரகுபதி
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை: நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மார்ச் 14) வெளியிடப்படவுள்ளது.
பாதை மாறும் மாணவர்கள்!
சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.

ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்; மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத் தேர்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது - மத்திய அமைச்சர் அமித் ஷா
இளைஞர்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தள்ளுகிறது. இத்தகைய பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் உள்ளனர்; சசி தரூர் விவகாரத்தை தொடர்ந்து ராகுல் உறுதி
கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மணிப்பூர்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

ஜோர்டான் எல்லையில் கேரளத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோர்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சேர்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! - லாரிகள் மூலம் அகற்றம்
அயோத்தி, மார்ச் 2: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான காலணிகள் குவிந்து வருவதால் அதை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.

மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்
ஐஎஸ்எல்கால் பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையு ம் முனைப்பில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கி ழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சர்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சர்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆதரித்தால் போதும் அடியேனை...
இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.

கண்ணகி நகரில் ஜூலைக்குள் 22,000 குடிநீர்த் தொட்டிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 2: சென்னையில் கண்ணகி நகர், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீர்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்
தமிழகத்தில் உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

திமுகவுக்கும் சமமான பொறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு 1974-இல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் எனவும், அப்போதைய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தவறில் சமமான பொறுப்பு உண்டு எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குப்பையில் தவறிய தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்
குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மார்ச் 11-இல் ‘நூறும் பாலும் சர்ப்ப பலி பூஜை’
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மார்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சர்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது.

தென்மாவட்ட பேருந்துகள் நாளைமுதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்
தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்
அஸ்ஸாம் முதல்வர்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தமிழக அரசு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலைய விரிவாக்கப் பணி: வீடுகளை இடிக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு
சென்னை விமானநிலைய விரிவாக்கப் பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகையில் திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தேமுதிக பங்கேற்கும்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.