CATEGORIES
Categorías
பொறியியல் கல்வி உதவித் தொகை விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
சென்னை, நவ.29: முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக் கலையியல் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.
பழங்குடியினர் வீடு கட்ட கூடுதல் நிதி
மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக குடியரசுத் தலைவர் தகவல்
நலவாரியத்தில் 3,300 பத்திரிகையாளர்கள்
சென்னை, நவ. 29: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நலவாரியத்தில் 3,300 பத்திரிகையாளர்கள் இணைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை
பல்லடம், நவ. 29: பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டனர்.
அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
டிச. 24 முதல் ஜன. 1வரை அரையாண்டு விடுமுறை
ரயிலில் கற்பூரம் ஏற்றினால் தண்டனை: ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை
சென்னை, நவ. 29: சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது, கற்பூரம் ஏற்றினால், ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொதுச் சேவை உரிமைச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்
பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘குளிர் காலத்தில் மூட்டு அழற்சி பாதிப்பு 30% அதிகரிப்பு’
மழை மற்றும் குளிர் காலத்தில் மூட்டு-இணைப்புத் திசு அழற்சி பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் இயக்க முன்னோடி வள்ளிநாயகம் மறைவு மார்க்சிஸ்ட் இரங்கல்
சென்னை, நவ.29: அறிவியல் இயக்க முன்னோடி அ.வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சு: சிஐடியு வலியுறுத்தல்
மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.27 கோடி மோசடி
ஆவடியில் ஏலச்சீட்டு நடத்தி, ரூ. 1.27 கோடி மோசடி செய்த வழக்கில், இரு தம்பதிகளை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தொழிலாளி கொலை வழக்கு: ஆட்டோ ஒட்டுநருக்கு ஆயுள் சிறை
ஆவடியில் நடைபெற்ற தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னையில் இன்று 13 விமானங்களின் சேவை ரத்து
புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் சனிக்கிழமை 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டையிலிருந்து காமராஜர் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து தொடக்கம்
திருவொற்றியூர், நவ.29: ஜோலார்பேட்டை ரயில்வே முனையத்திலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
திருவொற்றியூர், நவ.29: தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஃபென்ஜால் புயலையடுத்து சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஃபென்ஜால் புயல்: நவீன கருவிகளுடன் மீட்பு படையினர் தயார்
கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸார்
2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தேர்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் திருமங்கையாழ்வார் சிலை: மீட்கும் நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கையாழ்வார் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஆற்காடு இளவரசர் சொத்துகளை நிர்வகிக்க புதிய முகவர் நியமனம்
சென்னை, நவ. 29: ஆற்காடு இளவரசரின் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்க புதிய முகவராக ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியின் மகன் நவாப்சாதா குலாம் கௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
'டங்ஸ்டன்' சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை மாவட்டத்தில் 'டங்ஸ்டன்' கனிமம் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக சரிவு
புது தில்லி, நவ.29: சுமார் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக சரிந்துள்ளது.
ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்துக்கு இந்தியா வலியுறுத்தல்
வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
உருவானதுஃபென்ஜால் புயல்
புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்
'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்மை அளிக்கும் இறைவன்...
பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.