CATEGORIES
Categorías
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் டிச.4-இல் தொடங்கி டிச.6 வரை நடைபெறுகிறது என மாநாட்டுக் குழுவின் தலைவர் சி.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
எண்ம பரிவர்த்தனையில் பயணச்சீட்டு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விருது
எண்ம பரிவர்த்தனையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.
மாநகராட்சி பூங்காக்கள் மீண்டும் திறப்பு
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'ஃபென்ஜால்' புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வட சென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு
சென்னை, டிச.2: வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வரின் கணினித் தமிழ் விருது: டிச. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, டிச.2: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

புயல் சேதம்: ரூ.2,000 கோடி தேவை
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

2,163 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

திருவண்ணாமலையில் மண் சரிவு: 5 பேரின் உடல்கள் மீட்பு
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மகா தீபம் ஏற்றும் மலையின் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மண் சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கியவர்களில் 5 பேரின் சடலங்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டன. மேலும் 2 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஊத்தங்கரை: அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!
ஊத்தங்கரை, டிச. 2: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பெய்த தொடர் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன; குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.

மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

எஃப்.பி.ஐ காஷ் படேல் நியமனம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

ஒடிஸாவுக்கு 4-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இந்தியாவில் எய்ட்ஸ் உயிரிழப்பு 79% குறைவு
2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 'எய்ட்ஸ்' நோயால் ஏற்படும் இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளன; 'எச்ஐவி தொற்று 44 சதவீதம் குறைந்துள்ளது' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

அரையிறுதியில் இந்தியா
ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

பி.வி. சிந்து, லக்ஷயா சென் சாம்பியன்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வர்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்
இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன என அந்நாட்டு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சோஃபி பிரைமாஸ் தெரிவித்தார்.
பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உ.பி. சம்பல் வன்முறை: 3 நபர் ஆணையம் நேரில் விசாரணை
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வுப் பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணை ஆணையம், சம்பவ இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டது.