CATEGORIES
Categorías
அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு
மும்பை, டிச. 2: கடந்த நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 14,137-ஆக அதிகரித்துள்ளது.
45% ஏற்றம் கண்ட அந்நிய நேரடி முதலீடு
இந்தியாவின் சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு, மருந்துத் துறை களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஈரான் விமானத்தை தடுத்து அனுப்பிய இஸ்ரேல்
லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்காக வந்துகொண்டிருந்த ஈரான் விமானத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியா வான் எல்லையில் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' தெரிவித்தது.
முன்னணிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்வு
மும்பை/ புது தில்லி, டிச. 2: இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை பின்னர் எழுச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
சிரியா: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது அலெப்போ நகரம்
டமாஸ்கஸ், டிச. 2: சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மேற்கத்திய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்
வாஷிங்டன், டிச. 2: போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டர் பைடனுக்கு, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கினார்.
ஆண்டி முர்ரேவை பயிற்சியாளராக நியமித்தார் ஜோகோவிச்
பியூனஸ் அயர்ஸ், டிச. 2: செர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளராக பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முர்ரேவை நியமித்திருக்கிறார்.
வரி வசூலை எளிமைப்படுத்த குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
வரி வசூல் எளிதாகவும், அதிகம் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்
புலவயோ, டிச. 2: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.
உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, வைஷாலி பங்கேற்பு
அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிலிருந்து 5 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா அபார வெற்றி
ஷார்ஜா, டிச. 2: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை திங்கள்கிழமை வென்றது.
முகமிதானை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர், டிச. 2: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை தனது சொந்த மண்ணில் திங்கள்கிழமை வீழ்த்தியது.
ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை
ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு சீக்கியர்களின் அதிகார பீடமான அகால் தக்த் திங்கள்கிழமை தண்டனை வழங்கியது.
ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்
வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட துறவிகள்.
முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்
நாட்டில் மதவன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% வரை உயரும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
‘என்இபி 2020’ திட்டமும் ஆலோசனைகளும் தொடரும்: ஆ.ராசா எம்.பி.க்கு அமைச்சர் ஜெயந்த் சௌதரி பதில்
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) - 2020 மறுஆய்வு செய்யப்படுமா? என்று மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு, அத்திட்டமும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடிக்காக 'சபர்மதி ரிபோர்ட்' சிறப்புக் காட்சி
புது தில்லி, டிச. 2: நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால யோகி அரங்கத்தில் திங்கள்கிழமை மாலை திரையிடப்பட்ட 'சபர்மதி ரிபோர்ட்' திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார்.
பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை
நாகபுரி, டிச. 2: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தி அடையாதவர்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மத்திய அரசைக் கண்டித்து டிச.10-இல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: டி.ராஜா
மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து டிச.10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் டி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாஞ்சோலை மக்கள் வெளியேற்ற புகார்: நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி உத்தரவு
புது தில்லி, டிச.2: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்-சிங்கம்பட்டி வனப் பகுதி மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதாகக் கூறப்படும் புகாரில், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் இடையூறு இல்லாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
புது தில்லி, டிச. 2: அதானி விவகாரம் மற்றும் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதம் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாளை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வாகிறார்
புது தில்லி, டிச. 2: மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவர்) தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இரு நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீர்மானம்
ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவியேற்றது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, டிச. 2: போக்குவரத்துத் துறையில் வேலைக்குப் பணம் பெற்ற முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவி ஏற்றது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!
தரமான கல்வி மூலம்தான் அறிவு வளரும். அறிவு, கூரிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கூரிய சிந்தனை ஆழ்மனதில் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். படைப்பாற்றல் மூலம் அதனைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் உதயமாகும். புதிய தொழில்கள் செழிக்கும். இந்தச் சுழற்சிக்கு அடிப்படை, தரமான கல்வி.
மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கைச் சிறகுகள்!
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இடதுகால் போலியோவினால் பாதிக்கப்பட்டு வெறும் இரண்டு கிலோ எடையுடன் பிறந்தது.
வானிலை மைய முன்னெச்சரிக்கைகளை அரசு மதிக்காததால் வெள்ள பாதிப்பு
மழை பாதிப்பு, வானிலை ஆய்வு மையம் தந்த முன்னெச்சரிக்கைகளை அரசு மதித்து தேவையான நடவடிக்கை எடுக்காததால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்க நேர்ந்தது என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை: தண்டனையை நிறுத்திவைத்தது நீதிமன்றம்
சென்னை, டிச.2: பெரியார் ஈ.வெ.ரா. சிலை குறித்து சர்ச்சை பதிவு மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு தொடர்பான வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச மாதிரித் தேர்வு பயிற்சிகள்
சென்னை, டிச.2: ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச மாதிரித் தேர்வு டிச.7,8,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.