CATEGORIES
Categorías
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு உணர்ச்சிபூர்வ பதிலடி கூடாது
தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.
வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர்
டிரம்ப் அறிவிப்பு
சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்
புது தில்லி, நவ.8: சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு சிறார் அடிமையாகி விட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோர்வு என அவர்களின் நடத்தை யில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
WPL மகளிர் பிரீமியர் லீக்: 71 பேர் தக்கவைப்பு
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், 3-ஆவது சீசனுக்கு காக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல் வெளியானது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
அடிலெய்டு, நவ. 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா
சாம்சன் அதிரடி; வருண், பிஷ்னோய் அசத்தல்
3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் அர்ஜுன்
சேலஞ்சர்ஸில் அசத்தும் பிரணவ்
பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு'
குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, நவ.8: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சேர்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர்: 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 நக்சல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு வல்லரசு தகுதி
ரஷிய அதிபர் புதின் பாராட்டு
ஹரியாணாவைப் போன்று மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சிகள் தோற்கும்
அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதுபோல, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை பாஜக கூட்டணி தோற்கடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை
திரௌபதி முர்மு
கர்நாடகத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு
பெங்களூரு, நவ.8: விவசாயி இறந்தது குறித்து தவறான தகவலை பரப்பியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, 2 கன்னட இணையதளங்களின் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களை மதரீதியாக துண்டாட பாஜக தீவிரம்
ராகுல் குற்றச்சாட்டு
பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றம்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு பிராந்திய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்
இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல், மியான்மரில் தொடர்ந்து வரும் அரசியல் உள்பட சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யுஏபிஏ சட்டம்: தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உடன்பாடு
பயங்கரவாத செயல்பாட்டை ஒடுக்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தச் சட்டத்தை கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
திரிணமூல் எம்.பி. மஹுவா புகார்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவர் மாதபிக்கு லோக்பால் உத்தரவு
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகார் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர்: கடத்திக் கொல்லப்பட்ட கிராமப் பாதுகாவலர்களின் உடல்கள் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவத்தினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப் பாதுகாவலர்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்திக் கொன்றனர். இருவரின் உடல்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்!
உ.பி. அரசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் 3-ஆவது நாளாக அமளி
12 பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.