CATEGORIES
Categorías
20 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி அளிப்பு
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 440 இளைஞர்கள், மாணவர்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு ஜன.27-இல் இணைய வழியில் தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு ஜன. 27-ஆம் தேதி இணையவழியில் தேர்வு நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை பதவியேற்றார்.
வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
ராக்கெட், செயற்கைக்கோள் ஆய்வு மையம்: சென்னை ஐஐடி - இஸ்ரோ ஒப்பந்தம்
செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மணிப்பூர்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடும் சண்டையில் 2 வீரர்கள் காயம்
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானுக்கு மீண்டும் கடன்: சர்வதேச நிதியம் ஆலோசனை
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு அந்நாட்டின் கடன் கோரிக்கைகள் குறித்து மதிப்பிடுவதற்காக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆலோசனை நடத்தவுள்ளது.
குடியரசுக் கட்சியினருக்கு டிரம்ப் வேண்டுகோள்
வாஷிங்டன், நவ. 10: அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயக கட்சிக்கு குடியரசுக் கட்சியினர் நன்கொடை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 மாதங்களில் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழப்பு
2.3 லட்சம் வீடுகள்; 32 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் - அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சித் தோல்வி, லியோன் வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சித் தோல்வியடைந்தார். சேலஞ்சர்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா அபார வெற்றி பெற்றார்.
கோகோ கௌஃப் முதல் முறை சாம்பியன்
மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றார்.
2-ஆவது டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இலங்கை கடலில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: திசாநாயக
\"இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை\" என அந்த நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் மது விருந்து
ஹிந்து அமைப்புகள் அதிருப்தி
நடப்பாண்டில் 200 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்: பிஎஸ்எஃப்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு சிறியரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்யப்பட்டன.
ஓபிசி பிரிவினர் இடையே மோதலைத் தூண்ட காங்கிரஸ் முயற்சி
பொகாரோ, நவ. 10: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) இடையே மோதலைத் தூண்ட காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவின் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி 58% உயர்வு
நிகழாண்டின் முதல் 9 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் பெட்ரோலியப்பொருள்களின் ஏற்றுமதி 58 சதவீதம் உயர்ந்துள்ளது.
இலங்கையில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் வேலா'
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் வேலா', மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
இந்தியாவிலிருந்து ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவியை நாடுகிறது வங்கதேசம்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி அழைத்து வர 'இன்டர்போல்' உதவியை அந்நாட்டின் இடைக்கால அரசு நாடுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு, புற்றுநோய் தடுப்பூசி இலவசம்
மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்: பாஜக வாக்குறுதி