CATEGORIES
Categorías
Periódicos
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
ஏ.எல். முதலியார் தடகளப் போட்டி: 2-ஆவது நாளாக புதிய சாதனைகள்
சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 56-ஆவது ஏ.எல். முதலியார் தடகளப் போட்டியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
குகேஷுக்கு முதல் வெற்றி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ஆவது சுற்றில் இந்தியாவின் டி.கு நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை புதன்கிழமை வென்றார்.
திவித், சர்வானிகா உலக சாம்பியன்
இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-8) ரேப்பிட் பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டியும், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-10) ரேப்பிட் பிரிவில் தமிழகத்தின் சர்வானிகாவும் சாம்பியனாகி அசத்தியுள்ளனர்.
பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் இடைக்காலத் தடை
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு மாதிரியை வழங்க மறுத்ததாக, அவருக்கு 4 ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதானியைப் பாதுகாக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு
‘நாட்டில் சிறிய குற்றச்சாட்டுகளின்பேரில் நூற்றுக்கணக்கான நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்; ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான கோடி லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தொழிலதிபா் கெளதம் அதானி இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினாா்.
இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்
இணைய (சைபர்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் 'ஐஎம்இஐ' எண்களை மத்திய அரசு முடக்கியது.
தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்?
தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களைத் தயாரிக்கும் ஐசிஎஃப்
'மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தயாரிப்பு ஆலை (ஐசிஎஃப்) தயாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்
ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் சாதனை: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பெருமிதம்
தமிழகத்தில் கடந்தாண்டு 2.75 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் திறனாய்வுத் தேர்வு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு நவ.30-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
டிச.15-இல் அதிமுக பொதுக் குழு: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிச.15-இல் நடைபெறும் என்று பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித்தொடர்பாளர் ஆர். எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்: மக்களின் பங்களிப்பைக் கோரும் சுகாதாரத் துறை
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே சாதனை!
மாநிலத்தில் குற்றங்களே நடக்காமல் தடுப்பதுதான் சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
10 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் கனிமொழி வேண்டுகோள்
லட்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிடுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேச மாநில சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வும் முழுமையாக முடங்கியது.
பாவப்பட்ட விமானப் பயணிகள்!
நீர்வாகக் காரணங்களுக்காக விமானங்கள் 'ரத்து' என்ற தலைப்புச் செய்தி கடந்த சில நாட்களாகவே நமது செய்தி ஊடகங்களில் அடிக்கடி தென்படத் தொடங்கியுள்ளது.
தேவை சிந்தனை ஒருங்கிணைப்பும் செயல்பாடும்
ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் என்னை தொலைபேசியில் அழைத்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்
தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார் மோதியதில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் உயிரிழப்பு
திருப்போரூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டு விட்டு சாலையோரம் அமர்ந்திருந்த போது கார் மோதியதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவர்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு
தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினார்.