CATEGORIES
Categorías
குழந்தைகள் தின விழா: சிறந்த அரசுப் பள்ளிகள், மாணவர்களுக்கு பரிசு
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறந்த அரசுப் பள்ளிகள், போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.
கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்குகள்; அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகள் 50 சதவீதம் கூட நிரம்பவில்லை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகியும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகள் நிரம்பவில்லை. இந்த ஏரிகளில் 43.58 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
தமிழகத்தில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா - ஏ மற்றும் பி வகை தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
சிறப்புக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்
சிறப்பு குழந்தைகளை குடும்பத்தினர் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடுகள்
நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாளப் பட்டை; பாதுகாப்பு சோதனை
மணிப்பூரில் எஞ்சிய 6 பகுதிகளில் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் அமல்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் மாவட்ட காவல்நிலையம் உள்பட 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மத்திய அரசு மீண்டும் வியாழக்கிழமை அமல்படுத்தியது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 65% வாக்குப் பதிவு
இலங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 65 சதவீதம் பேர் வாக்களித்திருக்கக் கூடும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சராகும் தொலைக்காட்சி நெறியாளர்
தனது புதிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக முன்னாள் ராணுவ அதிகாரியும் 'ஃபாக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சி நெறியாளருமான பீட் ஹெக்செத்தை (44) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
2028-இல் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 45.7 கோடியாக உயரும்
ஜப்பானில் நடைபெறும் குமமோட்டோ மாஸ் டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன் னேறினார்.
நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்
இந்திய கடற்படையின் தலைமையில், 'கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்-24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
அரையிறுதியை நெருங்கும் சின்னர்
டுரின், நவ. 13: வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தார்.
திலக் வர்மா அதிரடி; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி
சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
சபரிமலை பக்தர்களின் உதவிக்கு 'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலி
மண்டல பூஜை யாத்திரையையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் உதவிக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உரையாடலில் தகவல் அளிக்கும் 'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றம், விமான நிலைய பாதுகாப்பில் மகளிர் சிஐஎஸ்எஃப் படை - அமித் ஷா தகவல்
நாடாளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனைத்து மகளிர் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பிரிவு ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிர வாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதலைத் தொடர்ந்து 3 பெண்கள், 3 குழந்தைகள் மாயமாகி உள்ளதை யொட்டி 13 சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதித்தது.
புதிய வரத்து தொடங்கியதும் வெங்காயம் விலை குறையும் - மத்திய அரசு தகவல்
காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரும்.
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
காஸாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் 'இளவரசர்' சதியில் ஈடுபட்டுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.