CATEGORIES
Categorías
பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி: வேலம்மாள் பள்ளி முதலிடம்
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வேலம்மாள் வித்யாலயா அணியும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும் முதலிடத்தைப் பிடித்தன.
வீட்டில் கொத்தடிமையாக பயன்படுத்தப்பட்ட சிறுமி உள்பட மூன்று பேர் மீட்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் கொத்தடிமை யாக பயன்படுத்தப்பட்ட சிறுமி உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னையில் 10 நூலகங்கள் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும்
சென்னை, நவ. 5: சென்னையில் ‘முதல்வர் படைப்பகம்’ போன்று 10 நூலகங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும் என பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
அடையாறு, பெருங்குடியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் புதன்கிழமை (நவ.6) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டி நாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.
நாகசதுர்த்தி: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
திருமலையில் நாகசதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு பெரிய சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலங்கள் கணக்கெடுப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை கணக்கெடுக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை நெல்வாய் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகளிர் விடியல் பயணத்துக்கு புதிய பேருந்துகளை பயன்படுத்த திட்டம்
புதிதாக வாங்கப்படும் பேருந்துகளை, மகளிர் விடியல் பயணத்துக்கு பயன்படுத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
அரசுத் திட்டங்கள்: கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு
அரசுத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த கள ஆய்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
ஓடும் ரயில் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு
ஒடிஸாவில் சம்பவம்; பயணிகள் தப்பினர்
நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
புது தில்லி, நவ. 5: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதிவரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பொதுமக்களின் வாக்குகளை அதிகமாக பெற்றும் தோற்றவர்கள்
பொதுமக்களின் வாக்குகளை அதிகமாகப் பெற்றபோதிலும், பிரதிநிதிகளின் வாக்குகளைக் குறைவாகப் பெற்றதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. புதிய அதிபர் டொனால்ட் டிரம்பா, கமலா ஹாரிஸா என்பது விரைவில் தெரியவரும்.
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள் சிறப்பு அபிஷேகம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பண்டிகை காலத்தில் மீண்டெழுந்த பெட்ரோல் விற்பனை
பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் உயர்ந்துள்ளது.
முக்கிய ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு
லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மால்டோவா தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மால்டோவாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபர் தேர்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபர் மாயா சந்து வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
பெண் சாதனையாளர்கள் பிறருக்கு வழிகாட்ட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் 21-ஆவது ரேஸான பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
ரைபகினாவை வீழ்த்தினார் ஜெங் கின்வென்
மகளிர் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை திங்கள்கிழமை வென்றார்.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஆந்திரத்தை வென்றது தமிழ்நாடு
சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 7-0 கோல் கணக்கில் ஆந்திர பிரதேசத்தை அபார வெற்றி கண்டது.
சென்னையின் எஃப்சிக்கு 3-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில், சென்னையின் எஃப்சி 5-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணிலேயே அபார வெற்றி கண்டது.
பாகிஸ்தானை வென்றது ஆஸி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
வயநாடு நிலச்சரிவை அரசியலாக்கும் பாஜக: பிரியங்கா காந்தி
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்குகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தலைவராக அப்துல் ரஹீம் தேர்வு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவையின் முதலாவது தலைவராக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் ஏழு முறை எம்எல்ஏவுமான அப்துல் ரஹீம் ராதர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியா: பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத் தலைநகர் பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
உ.பி.: வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் 'மிக்-29' போர் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் வயலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது (படம்).