CATEGORIES
Categorías
பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு
கிருட்டினகிரி மாவட்டம் பெல்லம்பள்ளி பகுதியில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு கல்வெட்டினை கண்டறிந்தனர்.
தமிழ்நாட்டில் 89 அணைகளின் நீர்மட்டம் 107 டிஎம்சியாக உயர்வு
நீர்வளத்துறை அதிகாரி தகவல்
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் திரைக் கலைஞர் ஜாக்கி சான்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இருதரப்பு உறவை வலுப்படுத்த சீனா-வடகொரியா உறுதி
ஜெய்ஜிங், ஜூலை13 வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள இரு தரப்பு உறவை வலுப்படுத்த சீனா மற்றும் வட கொரியா உறுதி பூண்டுள்ளன.
எத்தியோப்பியாவில் அபி அகமது மீண்டும் வெற்றி
அடிசபாபா, ஜூலை 13 கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்த திட்டமிட்டிருந்த பொதுத்தேர்தல் கரோனா வைரஸ் காரணமாக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பன்னாட்டு வேட்டை கண்காட்சிக்காக பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி
அபுதாபி,ஜூலை13 அபுதாபியில் நடைபெற உள்ள பன்னாட்டு வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில் பங்கேற்பதற்காக பால்கன் பறவைகளுக்கு குட்டி ரேடியோ விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டு விழா
பல்வேறு சமூக சேவை விருதுகளை வாங்கிய கழகத் துணைத்தலைவர் த, த, கார்த்தி கரூர் மாவட்ட கூடைப்பந்து தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
சென்னை, ஜூலை 13 பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு 26, சாந்தோம் நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் 12.07.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு : உயர்நீதிமன்றம்
அத்தியாவசிய தேவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை சட்டவிரோதமாக கருத முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு பறந்தார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.
இன்று பன்னாட்டு மலாலா தினம்
உலகின் கவனத்தை ஈர்த்த பெண் கல்வி போராளி
கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு
கீழடியில் நடந்துவரும் 7ஆம் கட்ட அகழ் வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறைகிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசியலில் ஈடுபடமாட்டேன்... மக்கள் மன்றமும் கலைப்பு
ரஜினிகாந்த் அறிக்கை
ரூ.4,000 கோடி முதலீடு: தென்னிந்தியாவில் கால்பதிக்கும் பேட்டரி நிறுவனம்!
அமெரிக்க நிறுவனமான சி4யு, நான்காயிரம் கோடி ருபாய் முதலீட்டில் புதிய லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு ஆலையை தென்னிந்தியாவில் நிறுவ உள்ளதாக ஒன்றிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
வட்டியே இல்லாமல் ரூ.60 ஆயிரம் வரை கடன் வழங்கும் பேடிஎம்
இந்த சலுகை தற்போது தமிழகம், கருநாடகா, கேரளா, ஆந்திரம், மற்றும் தெலுங்கானாவில் உள்ள 200 மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதார உள்கட்டமைப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது
உச்சநீதிமன்ற நீதிபதி பாராட்டு
கேரளாவில் புதிதாக 13,772 பேருக்கு கரோனா பாதிப்பு: மேலும் 142 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,772 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்
அமெரிக்க அரசு அறிவுறுத்தல்
நலம் தரும் 'அதிர்வு
உடல், உள்ளம் இரண்டையும் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு, பெருந்தொற்று காலத்தில் மேலோங்கியுள்ளது. இதற்கு ஈடுகொடுக்க தொழில்நுட்பத்தின் துணையோடு 'சவுண்ட் பெட்' போன்ற படுக்கைகள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் உடல் மற்றும் உள்ளத்தை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்ல, நவீன தொழில்நுட்பத்தை இத்தகைய படுக்கைகள் பயன்படுத்துகின்றன.
டெலிமார்க்கெட்டிங்' தொல்லை: 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
தொலைபேசியில் தொல்லை கொடுக்கும், ' டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் குரல் வளையை இன்னும் அதிகமாக நெருக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது, தொலைதொடர்புத் துறை.
உலகின் முதல் 'ஆய்வக இறைச்சி' தொழிற்சாலை!
கோழி, மீன் போன்ற பிராணிகளின் செல்களை, ஒரு கிண்ணியில் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்து பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, பிரபல உணவகங்களே ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட இறைச்சியை ஏற்க துவங்கியுள்ளன.
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வி: ப.சிதம்பரம்
கரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
இங்கிலாந்து-இந்திய ராணுவ தளபதிகள் சந்திப்பு
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாள்கள் பயணமாக 5.7.2021 அன்று இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது.
வீரதீர செயலுக்கான விருதுக்கு தஞ்சாவூர் காவலர் தேர்வு
ஒன்றிய அரசு சார்பில் வீர தீர செயல்களில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கும். பிரதமரின் உயிர் காக்கும் காவலர் விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலதெருவைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்கண்ணன்(35). இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
டெல்டா வைரசால் ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள்
ஈரானில் டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஊடகத்துறையினருக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்ததை தொடர்ந்து, சென்னை கலைவாளர் அரங்கில் நேற்று (6.7.2021 பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே வீரர்கள் செல்லும் நிலையில் மேலும் தமிழக வீரர் வீராங்கனைகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகின் முதல் வானிலை செயற்கைகோளை ஏவியது சீனா
வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, உலகின் முதல் வானிலை செயற்கை கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 8ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை கோள் 11 தானியங்கி பேலோடுகளுடன் ஜியு குவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.
அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை வெளியிட்டார் அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை, ஜூலை 6 அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார்.
அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஃப் போசோஸ் விலகல்
வாசிங்டன், ஜூலை 6 உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் போசாஸ் விலகியுள்ளார்.