CATEGORIES
Categorías
தென்பெண்ணையாற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
வெள்ளக்காடாக மாறிய, கடலூர், விழுப்புரம் : தரைப்பாலங்கள் மூழ்கி, 150 கிராமங்கள் துண்டிப்பு : சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையிலும் கடும் பாதிப்பு
ஒரு அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
2026 சட்டசபை தேர்தல் பாஜவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்
சட்டசபை தேர்தல் என்பது பாஜவுக்கு வாழ்வா? சாவா? என்பதை நிருபிக்கும் தேர்தல் என அண்ணாமலை கூறினார். சர்வதேச அரசியல் படிப்பு படிக்க லண்டன் சென்றிருந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை திரும்பினார்.
போலி என்ஆர்ஐ சான்றிதழ் 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார்
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தகவல்
சென்னையில் நாளை நடக்கிறது இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நாளை நடைபெறும் உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தொடங்கி வைக்கிறார்.
வலுவிழந்த பெஞ்சல் புயல், அரபிக் கடலை நோக்கிச் செல்லும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில்15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில்இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலால் வரலாறு காணாத சேதம் உடனடி நிவாரண நிதி T2,000 கோடி வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அவ்வையார் விருது
வரும் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
டிச.9, 10ம் தேதிகளில் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் நடைபெறும்
மதுரை மாவட்ட டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக தனி தீர்மானம்
பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராகவும் டிவிட்டர் பதிவு பாஜ நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை
பெரியார் சிலை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தும் டிவிட்டரில் பதிவிட்ட வழக்குகளில் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார்.
பெஞ்சல் புயலால் செங்கை, விழுப்புரம், கடலூர் கடுமையாக பாதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் : மீட்பு பணி விரைவாக நடந்து வருவதாக பேட்டி
நிரம்பி வழியும் கோயில் குளங்கள்
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த ஒரேநாள் மழையில் கோயில் குளங்கள் அனைத்தும் நிரம்பி இருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் விரைந்து வெளியேற்றம் வியாசர்பாடி, பெரம்பூரில் போக்குவரத்து சீரானது
கன மழை காரணமாக வட சென்னையின் முக்கிய இடங்களான பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், ஓட்டேரி, கொளத்தூர், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி உள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள்
பெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
பள்ளிப்பட்டில் தெருவின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 8ல் சாலியர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் அடுத்த மப்பேடு, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள டாங்வூ சர்பேஸ்டெக் நிறுவனத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே, புயல் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், வங்கிக் கடன்
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் 7 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
திருத்தணியில் 20 செ.மீ மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்
திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியது.
ஊரப்பாக்கம் -கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க வேண்டும்
ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க கோரி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டாங்கொளத்தூரில் கஞ்சா ஆயில் விற்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பிடிபட்டனர்
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, செல்போன் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த, கல்லூரி மாணவர்கள் 5 பேரை, கடந்த மாதம் 4ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தி ஊராட்சியில் மருத்துவ முகாம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரத்தி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டியிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவம் வரதராஜ பெருமாள், தாயாருக்கு ரத்ன அங்கி சேவை
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை யொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று போய் நாளை வாருங்கள் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் தேங்கும் பைல்கள்
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் பைல்கள் தேங்குவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்
கல்பாக்கம் அருகே மரம் விழுந்ததில் முதியவரின் வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில், அவரது மாட்டின் கொம்பு உடைந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.
மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்
மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுறச் செதுக்கினர்.