CATEGORIES
Categorías
உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா பகுதி
உக்ரைன் நாட்டில் செர்னோபில் என்ற ஒரு நகரம். முன்பு பார்வை யாளர்கள் செல்லக் கூடாத இடமாக இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் உள்ள புதிய அனுபவத்தைத் தேடுபவர்களையும், ஆர்வமிக்க சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளது செர்னோபில்.
டாக்டர் பக்கம்: மூச்சுத் திணறல்!
வேகமாக ஓடினால், ஓடி, ஓடி விளையாடினால் மூச்சிறைக்கும். அப்போது சற்று ஓய்வெடுத்தால் மூச்சிறைப்பு மறைந்து இயல்பு நிலை ஏற்படும். ஆனால் ஓய்வின்போது வரும் மூச்சுத் திணறல் எல்லாமே ஏதோ ஒரு நோயின் பாதிப்பினால் ஏற்படுவது. இது கொரொனா நோய் பரவும் காலம் என்பதால் சளி, இருமல், உள்ளவர்கள் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரை அணுகுவது மூச்சு திணறல் ஏற்படாமல் தடுக்கலாம்.
எனக்குள் இருக்கும் டீச்சர் கனவு! - சாம்பவி
சாம்பவி, சென்னையச் சேர்ந்தவர். சென்னைகிறிஸ்டியன் பெண்கள் கல்லூரியில் படித்தவர். இவரது அம்மா பார்வதி அப்பா குருமூர்த்தி. உடன்பிறந்த ஒரே ஒரு தங்கை உண்டு. இவரது குடும்பத்தில் யாரும் திரைத் துறையில் இல்லை. முதன் முதலாக இவர் மட்டுமே திரைத் துறையில் கால் பதித்து உள்ளார். வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பெற்றோர் என்னுடைய விருப்பத் திற்கு தடையாக இருக்க விரும்பாததால் என்னை சின்னத் திரையில் அனுமதித்தனர் என்கிறார்.
நீல நிறத்தில் எரிமலைக் குழம்பு!
உலகம் வியக்கும் அதியம் என்றாலே முதலிடத்தை பிடிப்பது இயற்கைதான். அத்தகைய இயற்கையில் சில அபூர்வமான சில நிகழ்வுகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நமது உடலின் அதிசயங்கள்!
நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரட் கேசரி
தேவையானவை: கேரட் அரை கிலோ, பால் - 1 கப், பேரீச்சம் பழம் 10, கோதுமை மாவு-2 டீஸ்பூன், சர்க்கரை - 1/4 கப், தேங்காய் துருவல் - 1/4 கப், லவங்கம் - 3, நெய் - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பொடி 1 டீஸ்பன்
சார்லஸ் - டயானா காதல் வீடு!
700 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டில்தான். இளவர்சர் சார்லஸ் டயானாவை சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்து டயானா வை விவாகரத்து செய்தபின். இளவர்சர்சார்லஸ் இங்கு தான் சுற்றி சுற்றி வந்தார். காரணம் பமீலா...! சார்லஸின் இரண்டாவது மனைவி.
சிறுநீரக கோளாறைப் போக்கும் வாழைத்தண்டு!
சிறுநீர் சம்பந்தப் பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச் சனகளைத் தோற்றுவிக்கும்.
இந்த கொரோனா காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது கைக்குழந்தை இருந்தாலோ மிகவும் கவனமாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இல்லத்தில் அல்லது உங்கள் இல்லத்தின் அருகாமையில் யாருக்கும் கொரோனாதொற்று இல்லாமல் இருந்தாலும், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையை தகுந்த பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வது அவசியமாகிறது.
ஆரோக்கிய உணவுகள்!
1.பஞ்சவர்ண காய்கறிகள்
அழிந்துபோன பழைய உலகம்!
பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரனங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதிய்ல் ஏற்கனவே ஒரு உலகம்' இருந்துள்ளதை விஞ்ஞானிகள் ஊர்ஜிதம் செய்து உள்ளனர்.
'இந்தப் பிள்ளை' யார்?
இவர்தாங்க விநாயகர். விக்கினங்களைக் கலைபவர். யானை முகத்துடன் இருப்பதால் 'வேழமுகன்' என்றும், 'கஜமுகன்' என்றும் அழைக்கப்படுபவர்.
செவ்வாய்க்கு பயணமாகும் முதல் அரபு விண்கலம்!
செவ்வாய்க் கோளுக்கு முதல் முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகு செவ்வாய்க் கோளை சுற்றி வருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப்பாதையை இந்த விண்கலம் சென்றடையும்.
தீக்காயத்துக்கு மீன் தோல் சிகிச்சை!
ஆப்பிரிக்க நாட்டில் நல்ல தண்ணீரில் வளரும் மீன் திலாப்பியா. உடலில் ஏற்படும் தீக்காயங்கள் விரைந்து ஆறுவதற்கு இந்த மீனின் தோல் வெட்டி எடுத்து சுத்தம் செய்து காயம்பட்ட இடத்தில் பற்றுப்போட பிரேசில் டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.
தீபம் ஏற்றும் விளக்கின் பலன்கள்!
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
தொண்டைக்கு இதமளிக்கும் மண்பானை நீர்!
கோடை காலம் வந்து விட்டாலே அனைவருக்கும் பசியை விட தாகம் தான் அதிகமாக இருக்கும். நாம் திட உணவை விட நீர்ச்சத்து உள்ள உணவை தான் இந்த வெயில் காலத்தில் அதிகம் எடுத்துக் கொள்வோம். தண்ணீர் அதிகமாக குடிக்கும் இந்த வெயில் காலத்தில் களிமண் பானையில் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும், தொண்டைக்கும் இதமளிக்கும்.
தொப்புள் ரகசியம்!
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமானவிஷயம் தான். ஒருவர் காலமான பிறகு தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது உணவுப்பொருட்களை தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடையும். முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் அதாவது 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்போதும் உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
கிழக்கு ஆசிய பூச்சிகள் சொல்லித் தரும் பாடம்!
வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும். சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண் மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சியை தொடராமல் கைவிடுவது தான்.
குழந்தை வளர்ப்பு: தூய்மையான தூக்கத்துக்கு மசாஜ்!
குழந்தைக்கு மசாஜ் செய்வது புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகானமன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இது குழந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பு, கண்ணுக்கு கண் தொடர்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.
யானை ஆறுவகை!
யானைகள் ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.
தண்ணீருக்குள் மூச்சை அடக்குவது ஆபத்தை தரும்!
மூச்சை அடக்கி தண்ணீருக்குள் அனைவரும் விளையாடி இருப்போம். இது ஒருவகை முக்கிய விளையாட்டும் கூட. நாமாக மூச்சை அடக்கி நீண்ட நேரம் வைத்திருப்பது தன்னார்வ மூச்சுத் திணறல் ஏற்படும். இதனை முறையான பயிற்சி மூலம் மட்டுமே பெற முடியும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
மனைவியைக் கவரும் மந்திரம்!
ஒவ்வொரு பெண்ணும்தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
தந்தை செய்யும் தவறுகள்!
குழந்தை வளர்ப்பில் தாயானவன் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இனையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றைபெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
பயனுள்ள தகவல்கள்!
சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவைக் கரைத்து விட்டு அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
கோபத்தை விரட்டும் தந்திரம்!
ஒரு சீடன் ஜென் குருவிடம் கேட்டான் ''என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.'' என்றான்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் மொழி!
காந்த ஊசி எப்பொழுதும் வடக்குத் திசையையே காட்டுவதால் கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அது போலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும் வரை அவன் வாழ்க்கை, கடலில் திசை தப்பிப் போவதில்லை.
மனச் சிதைவுக்கு இசை சிகிச்சை!
இசைகூட மருந்தாகுமா எனக் கேட்டால் நிச்சயம் மருந்தாகும் என்பதற்கு வாழ்வியல் சான்றுகள் நிறையவே உள்ளன. இளையராஜாவின் இசையமைப்பில் வெளி வருகிற பாடல்களை இதற்கு உதாரணமாக கூறுபவர்கள் தமிழகத்தில் அதிகம். சோர்ந்து போன பலரை இந்த இசை கட்டியிழுத்து வந்திருக்கிறது. அத்தனை மகத்துவம் வாய்ந்த இசையினால் சிகிச்சை அளித்து மன ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மேம்படுத்து கிறார்கள். பெரும்பாலானோரின் மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுவித்துக்கொள்ள இசை உதவுகிறது.
கும்பகோணம் டிகிரி காபி!
டிகிரி காபி அல்லது கும்பகோணம் டிகிரி காபி அல்லது கும்பகோணம் ஐயர் டிகிரி காபி என பல கடைகளை பார்க்கலாம். இதுக்கு என்ன சிறப்பு என பார்க்கலாம்.
அறிந்து கொள்வோம்...
நீல வண்ணத்தை காணும் ஒரே பறவை ஆந்தை ஆகும்.
40 வருடமாக தலைக்கு குளிக்காதவர்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகல் தேவ். இவருக்கு 63 வயதாகிறது. இவர் கடந்த 40 வருடங் களாக தனது தலை முடியை வெட்டவோ தண்ணீரில் அலசவோ செய்யவில்லையாம். இவரது முடி ஆறடி நீளத்தில் வளர்ந்து முடிச்சுகளுடன் காணப்படுகிறது.