CATEGORIES
Categories
எப்போது ராஜினாமா செய்யவேண்டும்?
சராசரியாக ஒவ்வொரு பணியாளரும் ஓர் ஆண்டில் 16 முறை வேலையை விட் டுவிடலாமா என்று நினைக்கிறார்களாம்! அடுத்த 1-2 ஆண்டுகளில் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட் டுவிடவேண்டும் என்று நினைப்பவர்கள் 43% பேர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
கொங்கு படைப்புலகம்
கொங்கு வட்டாரத்தில் படைப்புகளை அதிகமாக யாரும் கொண்டாடுவதுதில்லை என்கிற அங்கலாய்ப்பு இங்கு பலருக்கு உண்டு.
இரண்டாவது தலைநகர் தொடங்கிய விவாதம்!
நமது அந்திமழை ஜூன் மாத இதழில், “திருச்சி இரண்டாவது தலைநகரமா?'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டோம்.
அரசியலில் இது ஓர் ஆயுதம்!
1987-இல் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார் விபி சிங். முன்னதாக நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருந்தார். ராணுவத்துக்கு நீர்மூழ்கிகள் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முயன்றபோது, உருவான பிரச்னைகளால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே போபர்ஸ் பீரங்கி ஊழலும் வெடித்திருந்தது.
நம்ம பசியை ஆத்துறவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம்!
ஹோட்டல்களில் பணியாற்றும் சர்வர்களைப் பற்றி புதுமைப் பித்தன் சின்னஞ்சிறுகதை ஒன்றை எழுதியிருப்பார். இயந்திரமாக இருந்து இடையில் மனிதனாகும் கணங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.
சௌபா
அப்போது நான் சட்டக்கல்லூரி மாணவன். அன்புப் பாவலர் அறிவுமதியின் வீட்டுக்கு காலையில் சென்றிருந்தேன். தேனாம்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பாரதிராஜா அலுவலகம் செல்கிறோம். அங்கே இருந்தார் சௌபா.
சோகப்பட(ல)ங்கள்!
நாராயணன் எப்போதுமே வகுப்பில் முதல் ரேங்க் வாக்குகிறவன். அப்போதைய எஸ்.எஸ்.எல். சி என்கிற பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறுநூறுக்கு நானூற்றி இருபது மார்க் கிற்கு மேல் வாங்கியிருந்தான்.
முன்னால் நிற்பவர்கள்!
அவரு பேரு முருகன், இப்ப அந்தப் பேரைச் சொன்னாப் பிரச்னை... அதனால கோபால்ன்னு வெச்சுக்குவோம்..
முருகேச அண்ணன்
பொதுவாக முருகேச னை யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். அவனிடம் யாரும் நின்று பேசிக்கூட நான் பார்த்ததில்லை. என்னைவிடப் பதினைந்து வயது பெரியவனான அவனை நானே மரியாதையாகக் குறிப்பிடவில்லை பாருங்கள்.
புறாக்களுக்குப் பயந்தேன்!
பாக்யராஜ் பூர்ணிமா நட்சத்திர தம்பதியின் மகன், சாந்தனு, சுமார் இருபது வருடங்களுக்கு முன், 'வேட்டிய மடிச்சுகட்டு' படத்தில், சுட்டிப் பையனாக அறிமுகமானார். 2008ல் 'சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக தோன்றி, பல படங்களில் நடித்தவர் தற்போது ‘மாஸ்டர்' படத்தில் நடித்து, அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.
விற்பனையில் உலகில் முதலிடம் பிடித்த சரக்கு!
கொரோனா சமயத்தில் டாஸ்மாக் கடைகள் இன்னும் சென்னையில் திறக்கப்படவில்லை.
பால் என்பது வெண்ணிற அன்பு!
அண்ணாமலை படம் வந்த பிறகுதான் மக்கள் பால்காரர்களை நினைக்கிறார்கள் என்றில்லை! அதற்கு முன்பாகவே நம் மக்களின் வாழ்வில் பால்காரர்களுக்கு பிரிக்க முடியாத இடமும் உறவும் உண்டு. எனக்கும் அப்படித்தான்!
போரிடத் தவறிய ராஜகுமாரன்!
இந்திரா காந்தியைத் தலைவராகக் கொண்டு உருவாகி இருக்கும் புதிய கட்சியில் இணைந்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கட்சியை வீட்டு நீக்கப்படுவதாக காங்கிரஸ் செயற்குழு தீர்மானிக்கிறது-
நான்கே வயதான கவிஞன்!
ஒரு கவிதைத் தொகுப்பு விரைவில் வர இருக்கிறது.
மாம்பழக் குருவிகள் முட்டையிடும் தபால்பெட்டி!
"தயவு செய்து தபால் பெட்டியில் கடிதங்களை இடவேண்டாம். பறவைகள் கூடுகட்டியிருக்கின்றன"
வாமனம்
கிழவி கொல்லைப்பக்கம் போவதற்கு எழுந்தாள். கொல்லைப் புறத்தில்தான் கக்கூஸ் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே எல்லாம் இருக்கிற குச்சாக அவள் இருப்பிடம் இருக்கவில்லை.
தத்து!
முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச்சொல்லோ, திரிசொல்லோ, வடசொல்லோ அல்ல. இயற்சொல்தான்.
தலைக்கு மேல் ஒரு வேலை!
மார்க்கெட் எதிரிலுள்ள கறிக்கடை இறக்கத்தில்தான் கிருஷ்ணன் அண்ணனுடைய சலூன் இருந்தது. நான் அந்த கடைக்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே கிருஷ்ணண்ணனும் அப்பாவும் நண்பர்கள்.
வீட்டிலிருந்தே உலகம் சுற்றலாம்...வாங்க!
கொரோனா காலத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும்போது உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பார்த்து பாத்து சலித்தவாகளுக்கு இளைப்பாறலாக சுவாரஸ்யமான டாக்குமெண்ட்ரிகளும் அதே தளங்களில் கொட்டிக்கிடக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் உள்ள 'ரெஸ்டாரண்ட் ஆன் தி எட்ஜ்" அதில் ஒன்று.
திடமான மனதின் நிறம்!
நம்முடைய அன்றாடத்தைத் தொடங்கி வைப்பவர்களுள் முதன்மையானவர்கள் நம் வீட்டுக்குப் பால் , காய்கறிகள் , நாளிதழ்கள் கொண்டுவந்து தருபவர்கள்தான். வீட்டின் அருகிலிருக்கும் மளிகைக்கடையை அடுத்ததாகச் சொல்லலாம்.
சிறிய மனிதர்கள் பெரிய உண்மைகள்!
நாட்டிலும் ஊரிலும் தெருவிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொரோனா ஒரு நாள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.
செவிச்செல்வர்
காட்டூர் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்கும்போதே அவருக்குத் தெரிந்து விடுகிறது. ஓசைகளால் ஆனது அவரது உலகம். படியேறுவதையும் உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கொரோனாவின் மடியில்...
இரண்டு ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் பணி நிமித்தமாக இருக்கிறேன். மாதம் ஒருமுறை சென்னைக்கு வருவது வழக்கம். வரும் பொழுதெல்லாம் அப்பா திட்டிக்கொண்டிருப்பார். ஏன் வீண் செலவு என்று. எப்போது சென்னை வந்தாலும் குடும்பத்துடனே வருவேன். மனைவி மக்களும் கூட எனது பெற்றோரிடம் நெருக்கமாகவே இருந்தனர்
எங்கிருந்தோ வந்தான்!
என் தாயின் சித்தப்பா மாணிக்கம் பிள்ளை தாத்தா தான் திருநெல்வேலியிலேயே முதல் முதலாக வாடகைக் கார் ஒன்றை ஓட்டியுள்ளார். அப்போது நெல்லைக்கு பண்டித ஜவஹர்லால் நேரு வந்த போது அவர் காரிலேயே பயணித்துள்ளார்.
நெல்லை சென்ட்ரல் தியேட்டர்
செல்வத்துக்கு சுகர் என்று டாக்டர் சொன்னார். செல்வம் பேயறைந்தது போல் இருந்தான். தனக்கு சுகரா? செல்வத்தின் கருத்த முகம் வெளிறிப் போய் இருந்தது.
நினைப்பும் நிஜமும்!
தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு பாடல்: ''கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா? கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?'' அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும். இங்கே சில நினைப்பும் நிஜமும்.
பிஸினஸ் மூளை என்ன விலை?
பிஸினஸ் என்பதை ஏதோ ஏலியன்களின் தனி உலகம் போல பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென தனி செட் ஆஃப் ரூல்ஸ்' இருப்பதாக எக்கச்செக்க பில்ட் அப்கள்.
பூவுலகின் பெருந்தோழன்!
எனது புதையல்களில் இருந்து தேடியெடுக்கிறேன் அந்தப் புத்தகத்தை. எனது கல்லூரிக்காலக் கையெழுத்தில் 28.12.90 என்று நாளைக் குறித்திருக்கிறேன். புத்தகத்தின் பெயர்: 'இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை'!
மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்!
சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது நாம் நம்பிய கதைகள் பல. பென்சிலை சீவி வரும் மரத்தூளில் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்பது முதல், புத்தகத்திற்குள் வை த்தால் மயில் தோகை குட்டி போடும் என்பது வரை எத்தனையோ நம்பிக்கைகள்.
தம்பதிகளே, சண்டை போடுங்க!
கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருக்கலாம் இந்தவசனம் தான் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் மித்! என்றார் நண்பர் ஒருவர்.