CATEGORIES
Categories
மகாராஷ்டிர தேர்தலில் சந்தர்ப்பவாதிகள் நிராகரிப்பு
மகாராஷ்டிர தேர்தலில் சந்தர்ப்பவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் பங்கேற்கும் விழா: ராமதாஸை அழைப்போம்
விழுப்புரத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்க மாறு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
பெண் ஐஜியிடம் 'டிஜிட்டல் அரஸ்ட்' முயற்சி: சைபர் குற்றப் பிரிவு விசாரணை
சென்னையில் பெண் ஐஜியிடம் 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடிக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது
அரிட்டாபட்டி கிராம சபையில் அமைச்சர் உறுதி
குடிமைப் பணி தேர்வில் மருந்தாக்கியல் பாடங்கள்; ஸ்ரீராமச்சந்திரா பல்கலை. நிகழ்வில் கோரிக்கை
சென்னை, நவ. 23: இந்திய குடிமைப்பணி தேர்வில் மருந்தாக்கியல் பாடங்களை சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.யில் நடந்த தேசிய மருந்தாக்கியல் வார நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக சென்னை பனகல் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை (நவ.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது பயனளிக்காது மருத்துவர்கள் குற்றச்சாட்டு
சென்னை, நவ. 23: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது எந்த வகையிலும் பயனளிக்காது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
நவ.26-இல் மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை தேனாம்பேட்டை மற்றும் மீஞ்சூர்-இன் ஒரு சில பகுதிகளில் நவ.26-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
ஏர் இந்தியா விமான சேவை அதிகரிப்பு
சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏா் இந்தியா, இன்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயர்வு
சென்னை, நவ. 23: வடசென்னை வளர்ச்சித் திட்ட மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக அதிகரித்துள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தணிக்கை வார மாரத்தான்
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ரிப்பன் மாளிகையில் ‘மரபு நடைப்பயணம்’ தொடங்கியது
சென்னை, நவ. 23: சென்னை ரிப்பன் மாளிகையின் வரலாற்று, நிர்வாக முக்கியத்துவத்தை விளக்கும் ‘மரபு நடைப்பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது.
மறுமலர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ. 23: அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கியவர் கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசுப் பேருந்துகளில் தினமும் 57 லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணம்: தமிழக அரசு
சென்னை, நவ. 23: மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் 57 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி செயல்பாடுகள்: நவ.28, 29-இல் ஆய்வுக் கூட்டம்
சென்னை, நவ. 23: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவ.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பைப் பார்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சர்
சென்னை, நவ. 23: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் பார்வையிட்டார்.
230 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள்
மணலி சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 66 லட்சம் மதிப்பில் 230 மாற்றுத்திறனாளிகளுக்கான 409 சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்
தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை
4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசம்: வயநாட்டில் ராகுலை விஞ்சினார் பிரியங்கா
வயநாடு, நவ. 23: கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அபாரம்
பாஜக பின்னடைவு
மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அமோகம்
மும்பை, நவ. 23: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.