CATEGORIES
Categories
அரசு மருத்துவர்கள் இன்று நூதன போராட்டம்
சென்னை, நவ. 25: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (நவ. 26) நூதன போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
புயல் சின்னம் எதிரொலி: மீனவர்களுக்கு மானிய டீசல் விநியோகம் நிறுத்தம்
திருவொற்றியூர், நவ. 25: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தையொட்டி, மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் விநியோகத்தை மீன்வளத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்
சென்னை ஐஐடி-இல் தொடக்கம்
அரசமைப்புச் சட்ட தினம்; கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
சென்னை, நவ. 25: அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 50,000 பரிசு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நங்கநல்லூர் மெட்ரோ பெயர் மாற்றம்
சென்னை, நவ. 25: நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஓடிஏ-நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருவாய் உதவியாளர் பதவியிடங்களின் பெயர்களில் திருத்தம்: தமிழக அரசு
சென்னை, நவ.25: தமிழக அரசின் வருவாய்த் துறையில் வருவாய் உதவியாளர், இளநிலை வருவாய் உதவியாளர் ஆகியோர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் என அழைக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முகப்புரையை இணைத்து தமிழக அரசு கடிதம்
சென்னை, நவ. 25: அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதனுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பல் சென்னை துறைமுகம் வருகை
திருவொற்றியூர், நவ. 25: நெதர்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பலான 'ஸ்டேட் ஆம்ஸ்டர்டம்' சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.
பள்ளி பலகையில் பெயர் மாற்றம்; களம் கண்டோர்க்கு முதல்வர் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை
உள்துறை அமைச்சருக்கு கடிதம்
முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
நாட்டின் வளர்ச்சி இயந்திரம் கிழக்கு மாநிலங்கள் பிரதமர் மோடி புகழாரம்
கடந்த காலங்களில் பின்தங்கிய பிராந்தியமாக கருதப்பட்ட கிழக்கு மாநிலங்கள் தற்போது நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கம்
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம், உறவினர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அசத்தலான சதத்தால் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
ஜோர்டான் : இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை
ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரக அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை
ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மதகுரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து சமூக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னெள
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்
மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அஜீத் பவார் வெற்றியை ஏற்பதில் எந்தக் கவலையும் இல்லை: சரத் பவார்
'மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் அஜீத் பவார் கட்சி அதிக இடங்கள் வென்றதை ஏற்றுக் கொள்வதில் எந்த கவலையும் இல்லை' என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) பிரிவு தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தெற்குலகுக்கு 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி போதாது - ஐ.நா. மாநாட்டில் இந்தியா ஆட்சேபம்
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தெற்குலகுக்கான வருடாந்திர 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவு என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.
மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்? நீடிக்கும் எதிர்பார்ப்பு
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி நீடித்து வருகிறது.
வைஷ்ணவ தேவி கோயில் ரோப் கார் திட்டத்துக்கு எதிராக மூன்றாவது நாளாக போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்வதற்கான ரோப் கார் திட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசம்: அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுஆய்வு
இந்தியாவின் அதானி குழுமம் உள்பட 7 மின் உற்பத்தி நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேச இடைக்கால அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி
கொச்சி கடற்கரையில் இத்தாலிய பாய்மரக் கப்பலுடன் கூட்டுப் பயிற்சியில் சனிக்கிழமை ஈடுபட்ட இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி.
உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: தண்டவாளத்தில் 25 அடி நீள இரும்புக் குழாய்
உத்தர பிரதேசத்தில் ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் 25 அடி நீள இரும்புக் குழாயை வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.