CATEGORIES
Categories
டிச.15-இல் அதிமுக பொதுக் குழு: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிச.15-இல் நடைபெறும் என்று பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித்தொடர்பாளர் ஆர். எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்: மக்களின் பங்களிப்பைக் கோரும் சுகாதாரத் துறை
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே சாதனை!
மாநிலத்தில் குற்றங்களே நடக்காமல் தடுப்பதுதான் சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
10 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் கனிமொழி வேண்டுகோள்
லட்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிடுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேச மாநில சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வும் முழுமையாக முடங்கியது.
பாவப்பட்ட விமானப் பயணிகள்!
நீர்வாகக் காரணங்களுக்காக விமானங்கள் 'ரத்து' என்ற தலைப்புச் செய்தி கடந்த சில நாட்களாகவே நமது செய்தி ஊடகங்களில் அடிக்கடி தென்படத் தொடங்கியுள்ளது.
தேவை சிந்தனை ஒருங்கிணைப்பும் செயல்பாடும்
ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் என்னை தொலைபேசியில் அழைத்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்
தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார் மோதியதில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் உயிரிழப்பு
திருப்போரூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டு விட்டு சாலையோரம் அமர்ந்திருந்த போது கார் மோதியதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவர்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு
தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு: இபிஎஸ் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வலியுறுத்தினர்.
வாடகைத் தாய் முறைகேடு புகார்: இரு பெண்கள் கைது
சென்னையில் வாடகைத் தாய் முறைகேடு புகார் தொடர்பாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூரில் விபத்து: சென்னையைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே புதன்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
உலக நாடுகளுடன் டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம்
மத்திய வர்த்தகத் துறையின் கூடுதல் செயலர் விமல் ஆனந்த்
சர்வதேச கால்பந்தாட்ட முன்னாள் வீரருக்கு சென்னையில் மூட்டு மாற்று சிகிச்சை
சர்வதேச அளவில் பிரபலமான கால்பந்தாட்ட முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரிச்சர்ட் டோவாவுக்கு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை சென்னை, அடையாறு எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
காசிமேடு, மெரீனாவில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை
வட சென்னை பகுதியில் தொடரும் கடல் சீற்றத்தால் ராட்சத அலையில் சிக்கி கப்பல் வழிகாட்டி மிதவைகள் காசிமேடு மற்றும் மெரீனா கடற்கரையில் புதன்கிழமை ஒதுங்கின.
யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு! நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாம்பன் புதிய பாலத்தில்75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி
ராமேசுவரம்- மண்டபம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தின் வழியாக ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளார்.
1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
பிறந்த நாள் விழாவில் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம்
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் போட்டியிலிருந்து ஷிண்டே விலகல்
மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே விலகினார்.
பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, தமிழ்நாடு அரசே புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை
தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.
கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.