CATEGORIES
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேச்சு: விசிகவிலிருந்து 2 நிர்வாகிகள் இடைநீக்கம்
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து 2 நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மழைக் காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித் தொகை
நெசவாளர்களுக்கு மழைக்காலத்தில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கூறினார்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்
ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு
கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
சென்னை, நவ.8: அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்
மக்கள் நலத்திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி
திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.செல்வராஜ் (66), திருப்பதியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கோவை வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவையில் இரு நாள்கள் நடைபெற்ற பன்னாட்டு வாங்குவோர்-விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115.35 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு வழக்கு: 3 பேரை காவலில் விசாரிக்க அனுமதி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை 6 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் என்ஐஏ வுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் கொலை எதிர் வீட்டுக்காரர் கைது
சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிர் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடி, நவ. 8: பூந்தமல்லியில் ஆக்கிரமித்து வைத்திருந்த நகராட்சிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு பெங்களூரு இளைஞர் கைது
பெங்களூரு இளைஞர் கைது
ஐ.நா.விருது: சுகாதாரத் துறைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை, நவ.8: தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைக்கப்பெற்ற ஐ.நா. விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் காண்பித்து மக்கள் நல்வாழ்வுத் துறையினர் வாழ்த்து பெற்றனர்.
பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி!
சென்னை, நவம்பர் 8: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வர் நேரில் சென்று பேச்சாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை, நவ. 8: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்தணி முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம்
ஏராளமான பக்தர்கள் தரிசனம்
நீதித் துறை சேவையைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
சென்னை, நவ 8: தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை
புது தில்லி, நவ. 8: பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம்
அதிபர் பைடன் உறுதி
சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை
உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியா முடிவு
சத்தீஸ்கரில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் சத்தீஸ்கரில் தனது முதல் கிளையைத் திறந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் தடம் பதித்துள்ளது.
சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மார்ட் போன்கள்
இந்திய அறிதிறன் பேசி களுக்கான (ஸ்மார்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
சென்செக்ஸ் 836 புள்ளிகள் வீழ்ச்சி
கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென் செக்ஸ் 836 புள்ளிகளை இழந்தது.
மீண்டும் எம்ஹெச்370 விமான தேடுதல் வேட்டை
கோலாலம்பூர், நவ. 7: இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்
தங்கள் பகுதிகளில் வசிக்கும் 'பயங்கரவாதிகளின்' குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
அந்தமான் & நிகோபாரை திணறடித்து வென்ற தமிழ்நாடு 43 கோல்கள் குவித்தது
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 43-0 கோல் கணக்கில் அந்தமான் & நிகோபார் அணியை திணறடித்து வென்றது.
உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
வேலூர் விஐடி, சென்னை ஐஐடி ‘ஸ்டார்ட்அப்’ குழுக்கள் டென்மார்க்கில் கௌரவிப்பு
உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.