CATEGORIES
முதல் டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
டர்பன், நவ. 7: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம், தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.
பார்சிலோனா, பயர்ன் மியுனிக் வெற்றி; பிஎஸ்ஜி, ஆர்செனல் தோல்வி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா, பயர்ன் மியுனிக் அணிகள் வெற்றியையும், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் அணிகள் தோல்வியையும் வியாழக்கிழமை பதிவு செய்தன.
வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு வழங்கிய உணவில் புழு: ஆர்ப்பாட்டத்தில் மோதல்
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எஃப்ஐ) நடத்திய ஆர்ப்பாட்டம் மோதலில் முடிந்தது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு விசாரணையை மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளியே மாற்ற உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
அஸ்ஸாம்: இந்திய-பூடான் எல்லையில் புதிய ஒருங்கிணைந்த எல்லைச் சாவடி திறப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தியா-பூடான் எல்லையான தராங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் ஒருங்கிணைந்த எல்லைச் சாவடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வக்ஃப் மசோதா கூட்டங்களைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) வரும் சனிக்கிழமை முதல் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளும் கருத்துக் கேட்பு கூட்டங்களைப் புறக்கணிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொழில்துறைக்கு எதிரானவன் அல்ல; ஏகபோகத்தையே எதிர்க்கிறேன்
'நான் தொழில்துறைக்கு எதிரானவன் அல்ல; தொழில் துறையில் ஏகபோகத்தையே எதிர்க்கிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
படேலின் வழிகாட்டுதலைப் பின்பற்றினேன்: பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சர் ப்ரீத்தி படேல்
லண்டன், நவ.7:நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவிவகித்தபோது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் வழிகாட்டுதலைத் பின்பற்றி பணியாற்றினேன் என்று குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட பிரிட்டன் வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சர் ப்ரீத்தி படேல் தெரிவித்தார்.
பாஜகவுடன் இருக்கும் வரை அஜீத் பவாரை சேர்க்க மாட்டோம்: சுப்ரியா சுலே திட்டவட்டம்
பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்வரை அஜீத் பவாரை மீண்டும் எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று தேசிய வாத காங்கிரஸ் (பவார்) கட்சி செயல் தலைவரும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தெரிவித்தார்.
பிரேஸிலில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை மேலும் அதிகரிக்க முடிவு
பிரேஸிலில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை மேலும் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
வீரர்களுக்கு நன்றி செலுத்தவே 'ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டம்
சிப்படுத்தி இருக்கும். இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க திட்டத்தால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைந்தனர்.
பயிர்க்கழிவுகளை எரித்தால் இரட்டிப்பு அபராதம்: தில்லி மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
தில்லி தேசிய தலைநகர் வலையப்பகுதிகளில் (என்சிஆர்) பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைத் தடுக்க, வேளாண் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதத்தை மத்திய அரசு இரட்டிப்பாக்கி உள்ளது.
ஹிமாசல் முதல்வருக்கான சமோசா பாதுகாப்பு படையினருக்கு வழங்கல்
சிஐடி அறிக்கையால் சர்ச்சை
உச்சநீதிமன்ற கோடை விடுமுறை காலம் 'பகுதியளவு பணி நாள்' என பெயர் மாற்றம்
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம், 'பகுதியளவு நீதிமன்ற பணி நாள்கள்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல்: மக்கள் தீர்ப்பை இந்தியா வரவேற்கிறது
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவன விற்பனையாளர்களுக்கு சொந்தமான 19 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
இணையதள விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வழியாக பொருள்களை விற்பனை செய்யும் முக்கிய விற்பனையாளர்களுக்குச் சொந்தமான 19 இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இளைஞர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு
மகாராஷ்டிர தேர்தலில் வேட்பாளர் விநோத வாக்குறுதி
தமிழக அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மின்சார ஆணையம் அறிவுறுத்தல்
தமிழகத்திலுள்ள அனல்மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மின்சார ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு பாதித்த இடங்களில் விரைவு நோய்த் தடுப்பு குழுக்கள்
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் விரைவு நோய்த் தடுப்பு குழுக்கள் அனுப்பப்பட்டு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு உத்தரவு
நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்
பதிவு ரத்தான மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை
மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவ கவுன்சில் பதிவாளர் எச்சரித்துள்ளார்.
நெட் தேர்வில் ஆயுர்வேத உயிரியல்: யுஜிசி
உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் ஆயுர்வேத உயிரியல் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
விருதுநகரில் நாளைமுதல் இரு நாள்கள் கள ஆய்வுப் பணிகள்
கோவையைத் தொடர்ந்து, விருதுநகரில் நவ.9, 10 ஆகிய தேதிகளில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக முதல்வரும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தலிபான் பாதுகாப்பு அமைச்சருடன் இந்தியா முதல் முறையாகப் பேச்சு
காபூலில் தலிபான் பாதுகாப்பு அமைச்சர் (பொறுப்பு) முகமது யாகூப் முஜாஹிதை புதன்கிழமை சந்தித்து இந்தியா சார்பில் ஆலோசனை மேற்கொண்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் ஜே.பி.சிங்.
அதிமுகவில் கள ஆய்வுக் குழு
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொல்லம் ஆட்சியர் அலுவலக குண்டுவெடிப்பு மதுரையைச் சேர்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை
கேரள மாநிலம், கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து இங்குள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கை சமரசம் காரணமாக கைவிடக் கூடாது
பாதிக்கப்பட்டவருக்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ஏற்பட்ட சமரசம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் வழக்கை கைவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் அமளி-மோதல்
பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
எளிய மனிதர்களும் இதயம் கவரலாம்
எத்தனையோ எளிய மனிதர்களை தினசரி கடந்து செல்கிறோம். மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தையே, எழுதப் படிக்கத் தெரியாத சாமானியப் பெண்கள் திறம்பட வழி நடத்தியிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். வாசிப்பு இல்லாது போனாலும் அவர்கள் மனிதர்களைப் படித்திருக்கிறார்கள்.
இதுவல்ல டெஸ்ட் கிரிக்கெட்
திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதக் கூடியவர்கள், மோசமான ஒரு திரைப்படத்தைப் பார்க்க நேரிட்டால், 'எப்படிப் படம் எடுக்கக் கூடாது என்பதை இந்தத் திரைப்படம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.