CATEGORIES
திருவான்மியூர், வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மரப் பாதை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
காஞ்சிபுரம் கோயில்களில் சிருங்கேரி சங்கராசாரியர் தரிசனம்
சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தார்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்க பயிற்சிக் கல்லூரி - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கிண்டியில் ஓராண்டு படிப்புடன் கூடிய பயிற்சிக் கல்லூரி நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனைகளில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்விச் சான்றிதழை எண்ம முறையில் பாதுகாக்க தரவு அமைப்பு
பல்கலைக்கழக மற்றும் கல்லுரி மாணவா்கள் நலனுக்காக, அவா்களின் கல்விச் சான்றிதழை பாதுகாக்க ‘ஒரே தேசம் ஒரே டேட்டா’ என்ற தரவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய அங்கீகார வாரிய தலைவா்அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தாா்.
ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சேர்ந்த 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகை மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
தீபாவளி: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள்
சென்னை, அக்.27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்
‘பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்வி ரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்’ என்று அக்கட்சித் தலைவர் விஜய் கூறினார்.
நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு விரிவான திட்டம்
அமைச்சர் கே.என். நேரு
மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மதுரை!
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மதுரை மாநகரில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பந்தன் வங்கி வருவாய் 17% அதிகரிப்பு
தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கியின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்: 41-ஆக அதிகரித்த போலியோ பாதிப்பு
பாகிஸ்தானில் மேலும் இரண்டு சிறுவர்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,826 கோடி டாலராக சரிவு
கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,826.7 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
ரஷியாவுக்கு படை வீரர்கள்: மறைமுகமாக ஒப்புக்கொண்டது வடகொரியா
தங்கள் சிறப்புப் படை வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலை வடகொரியா மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
குறைவான காற்று மாசு: தமிழகத்தின் 3 நகரங்கள் சாதனை!
நாட்டில் காற்று மாசு குறைவான நகரங்களில் திருச்சியின் பல்கலைப்பேரூர் பகுதி முதலிடம் பெற்றுள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
ஈரானில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் உயிரிழப்பு
ஈரானில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் எல்லைக் காவல் படை அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் கின்வென் - கெனின்
ஜப்பான் ஓபன் மகளிர்டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், சீனாவின் கின்வென் ஜெங் - அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சுல்தான் ஜோஹர் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்
மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை போட்டியில் இந்தியா, 3-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.
வரலாறு படைத்தது நியூஸிலாந்து
இந்தியாவின் வெற்றி நடைக்கு தடை
மக்களே எனது வழிகாட்டி
பிரியங்கா காந்தி
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தவறான தகவல்களை உடனடியாக நீக்க சமூக ஊடகங்களுக்கு அரசு அறிவுறுத்தல்
விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சீரழிக்கிறது' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.
ஒடிஸாவில் தொடரும் கனமழை: சீரமைப்பு பணிகள் பாதிப்பு
ஒடிஸாவில் கரையைக் கடந்த டானா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இதன்காரணமாக சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால், சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் அவசியம்
\"இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக உருவெடுக்க, வர்த்தக மேம்பாடு, வளங்கள் மட்டும் போதாது. புரட்சிகரமான மாற்றம் அவசியம்\" என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத் வலியுறுத்தினார்.
அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26-இல் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமர்வு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் வெளியேற்றம்
இருநாட்டு உடன்பாட்டில் நடவடிக்கை
கிழக்கு லடாக்கில் சுமுகமாக படை விலக்கல்: சீனா
சீனா - இந்தியா இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகள் விலக்கல் சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொத்து விவரங்களை பிரியங்கா முழுமையாக வெளியிடவில்லை
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.