CATEGORIES
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் விடை
ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
பேருந்து, மின்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 100-ஆவது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 100-ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் 622 பயனாளிகளுக்கு ரூ. 51.90 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதிக கட்டணம்: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வெறுப்பை பரப்பும் பொறுப்பற்ற கட்சி காங்கிரஸ்
பொறுப்பற்ற கட்சியான காங்கிரஸ், ஹிந்து சமூகங்களுக்கு இடையே பகைமை வளா்த்து, வெறுப்பைப் பரப்பி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை விமா்சித்தாா்.
கொடைக்கானலுக்கு விரைவில் மாற்றுப் பாதை: அமைச்சர் எ.வ. வேலு
கொடைக்கானலுக்கு விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
ஹரியாணா தேர்தல் வெற்றி பிரதமர், பாஜக மூத்த தலைவர்களுடன் முதல்வர் நாயப் சிங் சைனி சந்திப்பு
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மூத்த தலைவா்களை மாநில முதல்வா் நாயப் சிங் சைனி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா - 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 80 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
பாகிஸ்தானில் மேலும் 4 சிறுவர்களுக்கு போலியோ
பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தீவிரமடைந்தது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்
இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான மோதல் புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது.
அரபிக் கடலில் உருவானது புயல் சின்னம்
அரபிக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது.
வேளாண் துறையில் புதிதாக 125 பணியாளர்களுக்கு நியமன ஆணை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வேளாண்மைத் துறையில் புதிதாக 125 பணியாளா்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு: 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு
சென்னை சென்ட்ரலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலக் கல்லூரி மாணவர் புதன் கிழமை உயிரிழந்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 25 புதிய தாழ்தள பேருந்துகள்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 22.69 கோடி மதிப்பீட்டில் 25 தாழ்தள பேருந்துகளை அமைச்சா் சிவசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திமுக அரசின் சாதனைகளுக்கு வெளிநாடுகளிலும் பாராட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் திமுக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு குவிந்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலத்தை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை மீட்டனர்.
மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பக் கெர், டெமிஸ் ஹஸ்ஸாபிஸ், ஜான் ஜம்பெர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
ரத்தன் டாடா (86) காலமானார்
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
போராட்டத்தைக் கைவிட வேண்டும்
சாம்சங் தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
ஹரியாணாவில் ‘இவிஎம்' குளறுபடி விசாரணை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
இலவச அரிசி திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
போட்டியாளர்களின் செயலிகளுக்கும் கூகுள் 'ப்ளே-ஸ்டோரில்' இடம்!
செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கூகுள் நிறுவனத்தின் ‘ப்ளே-ஸ்டோா்’ தளத்தில் அந்த நிறுவனத்தின் போட்டியாளா்களுடைய செயலிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர்: எஸ்.ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளுக்கும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
சல்மான் அகா சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
'இண்டியா' கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆராய்ந்து, இனி வரும் தேர்தல்களில் 'இண்டியா' கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ரஷீத் கட்சி படுதோல்வி
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீதின் அவாமி இதே ஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது.
தோல்விக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும்
ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கு யாா் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளாா்.