CATEGORIES
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி
மதுரை கனமழை பாதிப்பு: தீவிர மீட்புப் பணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
லாக்கர் உடைந்து தனியாக ஓடிய ரயில் என்ஜின்
காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலின் லாக்கர் உடைந்ததால் பெட்டிகளுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டு என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது.
தீபாவளி பண்டிகை: ராம்ராஜ் காட்டனின் டிஷ்யூ வேஷ்டி-சட்டைகள் அறிமுகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 9 வண்ணங்களில் டிஷ்யூ வேஷ்டி-சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: முந்துகிறார் டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முந்திவருகிறார்.
வங்கதேசம்: கலீதா ஜியா மீதான மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடர்ந்திருந்த மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிராந்திய போரின் விளிம்பில் மத்திய கிழக்கு
பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது.
எல் & டி ஃபைனான்ஸ் லாபம் ரூ.696 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவின் வங்கி அல்லாத முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எல் &டிபைனான்ஸின் வரிக்குப் பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.696 கோடியாக அதிகரித்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு தொடர்கிறது
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்
2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன.
நியூஸிலாந்து ஆதிக்கம் இந்தியா தடுமாற்றம்
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கே ஆட்டமிழந்து பின்னடைவை சந்தித்தது.
ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் கெனின் - போல்டர் மோதல்
ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் சோஃபியா கெனின், பிரிட்டனின் கேட்டி போல்டர் ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர்.
ராவல்பிண்டி டெஸ்ட்: பாக். 344-க்கு ஆட்டமிழப்பு
இங்கிலாந்துடன் 3-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஞானவாபி மசூதியில் அகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு
உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாரணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கேரளத்தில் எம்எல்ஏக்கள் குதிரை பேரம்: ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மறுப்பு
கேரளத்தில் இடதுசாரி எம்எல்ஏக்கள் இருவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார் பிரிவு) கட்சி தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க, தலா ரூ. 50 லட்சத்துக்கு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவெளியான செய்தியை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மறுத்தது.
தலித்களுக்கு எதிரான வன்முறை: 101 பேருக்கு ஆயுள் தண்டனை
கர்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
தடையற்ற வர்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை
'தடையற்ற வர்த்தக ஒப் பந்தத்தில் பால் பொருள்களைச் சேர்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியனுடம் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது' என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது.
சுற்றுலாத் துறையில் முதலீடு: இந்தியாவுடன் மாலத்தீவு ஆலோசனை
சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வது குறித்து இந்தியா- மாலத்தீவு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்திய பணியாளர்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு
திறன்மிகு இந்திய பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக (4 மடங்குக்கும் மேல்) அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
'முத்ரா' கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு: அறிவிக்கை வெளியிட்டது நிதியமைச்சகம்
நாட்டில் வேளாண் சாராத சிறுதொழில்களை ஊக்குவிக்கும் பிரதமரின் ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி விலக கனடா பிரதமர் மறுப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனர். இருப்பினும், பிரதமர் பதவியிலிருந்து விலக அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவர்கள் விரைவில் தேர்வு
முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 நாள்கள் மழை நீடிக்கும்
தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.26) முதல் அக்.31 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்கும்
வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி க.பழனிசாமி பேசினார்.
2026 இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்
உச்சபட்ச அரசியல் ஒழுங்குடன், கமே உற்று நோக்கிப் போற்றும் உல விதமாகக் கொண்டாடும் வகையில், 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அக். 28-இல் இ.பி.எஃப். குறைதீர் கூட்டம்
தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சார்பில், குறைதீர் முகாம் வரும் அக். 28-ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.