CATEGORIES
ஏழுமலையான் கோயில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும், ஆன்மிக சூழலை காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தான அறங்காலர் குழு முடிவு செய்துள்ளது.
வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது
பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது என்று வயநாடு தொகுதியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி பேசினார்.
பாம்புக்கடி பாதிப்பை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது
பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பை அரசுக்கு தெரிவிக்கக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளது.
அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்னோவில் நேற்று நடந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 டோர்னமென்ட் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டியில் அதிரடியாக நுழைந்தார்.
இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று, இமாலய வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தோல்வியின் விளிம்பில் நியூசி.
நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 499 ரன் எடுத்தது.
இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வங்கதேச வக்கீல் கொலையில் 9 பேர் கைது
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பெருமளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். சட்டப்பேரவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல் செய்ய வேண்டுமெனவும் கோரி, 93 வயது சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், புலேவாடாவில் 3 நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சரத் பவார் அவரை சென்று பார்த்தார்.
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி கைது
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தொழில் முதலீடு என்று கூறி பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி ெசய்த நபர் மீது விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹீத் பள்ளிவாசல் மர்கஸ்களில் தங்கலாம்
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹீத் பள்ளிவாசல், மர்கஸ்களில் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு
மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல், மழைக்கு சென்னையில் ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி
வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கனமழை
பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் நேற்று சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு
சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சிறப்பு ரயில்கள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
சபரிமலை சீசனையொட்டி கச்சக்குடா, ஐதராபாத்தில் இருந்து நவம்பர் மாதத்தில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை விமானங்கள் ரத்து
புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
நெல்லை நாதக செயலாளர், நிர்வாகிகள் கூண்டோடு விலகல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
தமிழகத்தில் புயலால் நிகழ்ச்சி ரத்து ஜனாதிபதி முர்மு டெல்லி திரும்பினார்
நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, புயல் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.
கோபி அருகே நள்ளிரவில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை
கோபி அருகே துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செங்கோட்டையன் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (56).
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நர்ஸ் கழிப்பறையில் ரகசிய கேமரா பயிற்சி டாக்டர் அதிரடி கைது
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகூர் தர்கா கந்தூரி விழா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றம்
புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 5 மினராக்களில் நேற்று பாய்மரம் ஏற்றப்பட்டது.
பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் மின்சாரம் பாதிப்பு ஏதும் இல்லை
பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24*7 செயல்பட்டு வரும் பொது மக்களுக்கான மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்போம்
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசும் இரட்டை வேடம் போடும் எதிர்க்கட்சிகளும் தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு ஒப்புதலை தெரிவித்ததாக பொய் பரப்புகின்றன
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் அளித்துள்ளது.
பெஞ்சல் புயலால் பெய்யும் கனமழை தாம்பரம்-பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடல்போல் தேங்கிய மழைநீர்
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லபாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், செம்பாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய மக்கள்
பெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் சென்னை விமானநிலையம் மூடப்பட்டது
சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளதால், சென்னை விமான நிலையம் நேற்று பகல் 12:30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி வரையில் தற்காலிகமாக மூடப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்தது
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
போலி உத்தரவாதம் கொடுத்து பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
போலி உத்தரவாதம் கொடுத்து பெல் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.