CATEGORIES
உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வட்டாரப் பகுதிகளில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு சுமார் 4,000 எக்டேர் பரப்பளவில் மானா வாரியாகப் பயிரிடப்பட்டுள்ளது. அவற்றுள் உளுந்தானது 80 சதவீத பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும், அவற்றுள் மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் தேமல் நோயை பரப்பக்கூடிய வெள்ளை ஈக்கள் முக்கியமானதாகும்.
நெற்பயிரில் குலைநோய், மாவுப் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
நெற்பயிரில் குலைநோய், மாவுப் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்தார்.
41 லட்சம் பால் சங்க விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது
மத்திய அரசு தகவல்
மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000க்கு விற்பனை
மதுரையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2000க்கு விற்பனையானது. தற்போது பனி காலமாக இருப்பதால், பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
விவசாயிகள் பயனடைவதற்காகவே வேளாண் சட்டங்கள் வகுக்கப்பட்டன
மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு
நேரடி நிலக்கடலை வரிசை விதைப்புக் கருவி செயல் விளக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் சார்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் வட்டாரத்தில் உள்ள மும்முடிச்சாத்தான் கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது.
ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ரூ.68 லட்சத்துக்கு ஏலம் போனது
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்களன்று நடைபெற்ற ஏலத்தில் பருத்தி ரூ.68 லட்சத்துக்கு ஏலம் போயின.
தேசிய விவசாயிகள் தினத்தில் பட்டினி போராட்டத்தில் விவசாயிகள்
தேசிய விவசாயிகள் இன்று (டிச. 23) நாட்டின் தலைநகரில் வீதிகளில் விவசாயிகள் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பலருக்கும் கவலையை வரவழைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 21ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியது
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் 20 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
நெற்பயிர்களின் பாதிப்பு 20,000 ஹெக்டேராக அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏறத்தாழ 11,730 ஹெக்டேரில் நெல், நிலக்கடலை, மக்காசோளம் ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக, மதுக்கூர், ஒரத்தநாடு, தஞ்சாவூர் வட்டாரங்களில் கதிர்கள் முற்றி, அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன.
ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
கரும்பு கொள்முதல் விலையைக் குறைக்க முடியாது மத்திய அமைச்சர் தகவல்
விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையைக் குறைக்க முடியாது என்று, இந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர் சங்க (ஐஎஸ்எம்ஏ) நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திருப்புவனம் பகுதியில் வெங்காயச் செடிகள் நோயால் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பெய்த தொடர் மழையால் 300 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட வெங்காயச் செடிகளில் தண்ணி தேங்கி திருகல் நோய் ஏற்பட்டு அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
பிரதமர் தமிழில் டுவீட்
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்ற முடிவு
கேரளாவில் சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அம் மாநில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயிகளை அசிங்கப்படுத்திவிட்டு மறுபக்கம் நாடமாடுகிறது பாஜக
கே.எஸ்.அழகிரி விமர்சனம்
விழுப்புரம் மாவட்டத்தில் 860 ஏரிகள் நிரம்பின
விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள ஏரிகளுமே விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழைநீர், தென்பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுத்து வந்து உபரிநீர், ஏரிகளில் நிரம்பும்.
ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்ய வலியுறுத்தல்
திருந்திய பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ் ராபி பருவப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நடப்பு காரீப் பருவத்தில் ரூ.16,865.81 கோடிக்கு பருத்தி கொள்முதல்
நடப்பு காரீப் பருவக் கொள்முதலில், 11,24,252 விவசாயிகளிடமிருந்து ரூ.16,865.81 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், வாணியம்பாடியில் 500 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு
மாவட்ட ஆட்சியர் தகவல்
'தேசிய விவசாயிகள் தின விழா 2020 '
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், விரிவாக்க கல்வி இயக்ககம், சென்னையின் கீழ் இயங்கும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையத்துடன் இணைந்து ஏமூர் கிராமத்தில் 23.12.2020 புதன்கிழமை அன்று தேசிய விவசாயிகள் தின விழா 2020' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்வு
சந்தைகளில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்கு மதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மணிமுக்தா அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையிலிருந்து வியாழக்கிழமை 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல, கோமுகி அணையிலிருந்து 1,400 கனஅடி நீரும் வெறியேற்றப்பட்டு வருகிறது.
மழை பெய்தும் நிரம்பாத ஏரிகள் பொதுப்பணித் துறை ஆய்வு
தமிழகத்தில் கனமழை பெய்தும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 81 ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பூண்டி ஏரிக்கு கடந்த 3 மாதங்களில் 4.329 டிஎம்சி தண்ணீர் வருகை
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின் படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 45.62 லட்சம் விவசாயிகளுக்கு பயன்
மத்திய அரசு தகவல்