
இதற்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நீட் முறைகேடு தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. நீட் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தமிழ்நாடு முழுமையாக எதிர்த்து வருகிறது.
மருத்துவத்துறையிலும், சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கலைஞர் கருணாநிதி.
ஆனால், நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியபின் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மேலும் நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளன.
நீட் தேர்வு முறைகேடு:
இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
この記事は Thangamangai の Thanga Mangai July 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thangamangai の Thanga Mangai July 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.