CATEGORIES
Kategorier
சிறுவனின் கழுத்தில் சிக்கிய இரும்பு கொக்கியை போராடி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்
திருப்பூர் மாவட்டம் பாரதி புரத்தைச் சேர்ந்த சிவராஜ் மகன்ரித்திகேஷ்வர்(7). மூன்றாம் வகுப்பு மாணவர். வீட்டருகேயுள்ள மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரெனமரக்கிளை ஒடிந்து சிறுவன் மீது விழுந்தது.
கர்நாடகாவில் முக கவச தினம் அனுசரிப்பு - முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு
கரோனா நோயை விரட்ட முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று முக கவச தினம் அனுசரிக்கப்பட்டது.
ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.
ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் என்றைக்கும் வீண்போகாது - இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்
சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை
தனிமைப்படுத்தி கொண்ட ஐசிஎம்ஆர் துணை இயக்குநர்
வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.
லடாக் மோதலில் உயிரிழந்த ஒடிசாவை சேர்ந்த நந்து ராம் பெரிய குடும்பத்தின் தலைவர்
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களில், ஒடிசாவின் நந்து ராம் சோரனும் ஒருவர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை பற்றி விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
ஒருங்கிணைந்த செயல்பாட்டில் சென்னையின் லட்சணம்
பெருநகர சென்னை மாநகராட்சி 77-வது வட்டம் கேசவ பிள்ளை பூங்கா பேருந்து நிலைய இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரித்து, விரித்து, உட்கார்ந்துகொண்டும் உறங்கிக்கொண்டும் இருக்கிறார் 65 வயது பாலம்மாள்.
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு கோவையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
'தமிழும் வளரணும் தமிழனும் வளரணும்'
கவிஞர் விவேகாவுடன் கவித்துவ சந்திப்பு
100 வயது மூதாட்டியை இழுத்துச் சென்ற விவகாரத்தில் வங்கி மேலாளர் சஸ்பெண்ட்
ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது.
தமிழர் பண்பாட்டை உலகெங்கும் கொண்டுசென்றவர் பிரதமர் மோடி
கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
சென்னையில் கரோனா தடுப்பு பணிக்காக நடத்தப்படும் 680 மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தல்
சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிக்கு 'சீல்'
திருச்செங்கோட்டில் அரசின் விதிமுறையை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் 2,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிரம்
தூத்துக்குடிமாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதியில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
'நெல் மகசூலில் விவசாயிகள் புதிய சாதனை படைப்பார்கள்'
பிரதமர் மோடி முகத்துடன் முகக் கவசம் போபாலில் விறுவிறுப்பாக விற்பனை
கரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
படகு மூழ்கி மாயமான 4 மீனவரில் ஒருவர் மீட்பு
ராமேசுவரத்தில் உறவினர்கள் சாலை மறியல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் சோனுவை வழிபட்ட ஒடிசா மக்கள்
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி பரிதவித்தனர்.
மக்கள் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் கரோனாவை கட்டுப்படுத்த உதவும்
தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கருத்து
இப்படித்தான் சமாளிக்கிறோம் - தொலைக்காட்சி இல்லாத இனிமையான நாட்கள்
நான் ஆசிரியப் பணியில் இருக்கி றேன். என் கணவர் விற்பனைப் பிரதிநிதி. அவர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை மேற்கொண்டுவருகிறார். அதனால் பிள்ளைகள் என்னுடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையில் அமைந்தது. முதல் பத்து நாட்களிலேயே அவர்கள் அலுப்படைந்துவிட்டார்கள். அதனால், என்னுடைய பயிற்சிகளுக்குள் அவர்களைக் கொண்டு வருவதற்காகப் பல வழிகளிலும் முயன்றேன்.
தஞ்சாவூர் அருகே 9, 10-ம் நூற்றாண்டு விஷ்ணு, சமணர் சிற்பங்கள் கண்டெடுப்பு
தஞ்சாவூரை அடுத்த பூதலூரில் உள்ள கன்னிமார்தோப்பு என்ற வயல்வெளிகளில் சில சிற்பங்கள் காணப்படுவதாக அவ்வூரைச் சேர்ந்த புத்தர் என்பவர் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்று ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளரும், சரசுவதி மஹால் நூலக தமிழ்ப் பண்டிதருமான மணிமாறன் கூறியதாவது: இப்பகுதியில் மிகச்சிறிய சப்தமாதர், விஷ்ணு, சமண தீர்த்தங்கரர் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.
வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் மோட்டார் சைக்கிள்களை திருடினேன்
மதுரையில் கைதான கிறிஸ்தவ மத போதகர் வாக்குமூலம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம். முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
போலீஸார் மீது சூதாட்ட கும்பல் தாக்குதல்
அதிமுக-வைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது
திருச்செந்தூர் கோயில் கிரிப்பிரகாரத்தில் ரூ.98 லட்சத்தில் கூரைப் பணி தொடக்கம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கிரி பிரகாரத்தில் ரூ.98 லட்சம் மதிப்பில் கூரை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த உண்மை நிலையை அறிவிக்க மேற்கு மண்டல எம்பி-க்கள் வலியுறுத்தல்
கரோனா பாதிப்பு குறித்து அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு, நோய் பாதிப்புக்களின் உண்மை நிலையை அறிவிக்க வேண்டும் என மேற்கு மண்டல எம்பி-க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு மாதம் ஊரடங்கை அமல்படுத்தினால் கரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம்
தனியார் நிறுவன கருத்துக் கணிப்பில் 74 சதவீதம் பேர் நம்பிக்கை