CATEGORIES
Kategorier
நடிப்புத் துறைக்குப் பாதை வகுத்த படிப்பு: சஞ்சனா
தாம் மேற்கொண்ட பட்டப்படிப்புதான் தம்மை நடிகையாக மாற்றியது என்கிறார் சஞ்சனா நடராஜன்.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
கடந்த ஆண்டில் சிங்கப்பூர்வாசிகளில் 58 விழுக்காட்டினர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சராசரியாக இந்த விகிதம் 48 விழுக்காடாகும்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னிலக்க நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள்; 12 கோடி பேர் பார்வை
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அங்கமாக இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கி உள்ள மின்னிலக்க நூலகத்தை இதுவரை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர், வள்ளலாரைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது: ஸ்டாலின்
வள்ளுவர், வள்ளலாரைப் பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: சென்ற ஆண்டில் மட்டும் 4,975 பேர் கைது
கடந்த 2024ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறைகளில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளை மேற்கொண்டதாகக் கூறி, 4,975 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
14 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
இந்தியாவின் சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 14 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
பண்டிகைக் கொண்டாட்ட காலத்தில் இதயம்மீது கவனம்
பண்டிகை என்றாலே வழக்கத்தைக் காட்டிலும் அதிக உணவு, இனிப்பு என்று நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது சுகமான அனுபவம்தான்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உறுதிசெய்யப்பட்ட மார்க்கோ ருபியோ
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
‘நான் பெற்ற முதல் விருது: தாம் படித்த பள்ளிக்கு காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த ரஜினி
தாம் படித்த பள்ளியில் பழைய மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் காணொளி மூலம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஜினி.
சிறுவர்களிடம் ஆரோக்கியமற்ற பழக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி ஆரோக்கியப் பழக்கங்களை கடைப்பிடிக்க புதிய திட்டம்
தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் அனைத்துச் சிறுவர்களுக்கும் 2025 முதல் தனிப்பட்ட சுகாதாரத் திட்டம் ஒன்று கிடைக்கும்.
பதவியேற்புக்குப் பிறகு அதிரடி காட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டோனால்ட் டிரம்ப், நாடாளுமன்றக் கலவரத்தில் தொடர்புடைய ஏறத்தாழ 1,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
முகவர்களுக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாகத் தகவல் இந்தியாவுக்குள் ஊடுருவிய 6 கோடி பங்ளாதேஷ் குடிமக்கள்
சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய பங்ளாதேஷ் குடிமக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஆறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
‘லிஷா’விற்கு ஆசியான் சுற்றுலா மன்ற விருது
ஆசியான் சுற்றுலா மன்றம் வழங்கும் ‘ஆசியான் சமூக அடிப்படையிலான சுற்றுலா விருதைப்’ (Community-based tourism Award) பெற்றுள்ளது லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா).
துருக்கி ஹோட்டலில் தீ; பதின்மர் மரணம், 32 பேர் காயம்
துருக்கியில் உள்ள பனிச்சறுக்கு உல்லாசத்தலம் ஒன்றில் இருக்கும் ஹோட்டல் தீப்பிடித்து எரிந்ததில் பத்துப் பேர் மாண்டுவிட்டதாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
காஸாவைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பலகாலம் ஆகும்: ஐநா அதிகாரி
பேரால் சீர்குலைந்துபோயிருக்கும் காஸாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர மிகவும் அதிக காலம் ஆகும் என்று ஐக்கிய நாட்டுச் சபை (ஐநா) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கிராப்-பிஒய்டி பங்காளித்துவம்: மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்
கிராப் நிறுவனம் அதனிடம் உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.
பால் கொட்டியதற்கு ராகுல் காந்தியே காரணம் என புகார்
தன் கைதவறி பால் கலன் கொட்டி, ரூ. 250 இழப்பு ஏற்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது இந்திய ஆடவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
என்யுஎஸ் வழங்கும் புதிய செயற்கை நுண்ணறிவுப் பாடங்கள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) சேரும் இளநிலை, முதுநிலைப் பட்டக்கல்வி மாணவர்கள் இனி செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய பட்டக்கல்விப் பாடத்திட்டங்களை மேற்கொள்ளலாம்.
மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைக் குறைக்க கடும் வழிகாட்டுதல்கள் வெளியீடு
கணினி, தொலைக்காட்சி, மின்னிலக்கச் சாதனங்களின் திரைநேரத்தைக் குறைக்க உதவும் இந்த வழிகாட்டுதலை குழந்தைகள், சிறுவர்கள் பின்பற்றுவதைப் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.
அங் மோ கியோ கொலை: சந்தேகப் பேர்வழியிடம் சம்பவ இடத்தில் விசாரணை
அங் மோ கியோவில் 67 வயது பெண்ணைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) சம்பவ இடத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
தோ பாயோவில் நடையருக்கு மட்டுமான நடைபாதை திறப்பு
தோ பாயோவில் உள்ள சில நடைபாதைகள், நடையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களுக்கு மட்டுமான நடைபாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. தோ பாயோ சென்ட்ரல், தோ பாயோ லோரோங் 1, தோ பாயோ லோரோங் 4 உள்ளிட்ட இடங்களில் உள்ள நடைபாதைகள் அவை.
பதவி ஏற்றதும் பல்வேறு உத்தரவுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்து
எதிர்பார்த்ததுபோலவே அதிபர் பதவி ஏற்றதும் பல்வேறு உத்தரவுகளில் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார் யூன்
கிளர்ச்சி ஏற்படுத்தியது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எதிர்கொள்கிறார்.
செல்வப்பெருந்தகை: கல்வி நிலையங்களில் காவிமயம் வேண்டாம்
கோமியத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது என்று இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் காமகோடி அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது தொடர்கிறது.
'எந்தக் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவார் தனுஷ்’
தன் வயதுக்கு எட்டவேண்டிய உயரத்தைவிட நடிகர் தனுஷ் இப்போது இருக்கும் இடம் மிகப்பெரியது. அவர் அடைந்துள்ள உயரமும் மிக அதிகமானது,” என்கிறார் இயக்குநர் சேகர் கமுல்லா.
அனைத்து வீடுகளிலும் நடக்கும் கதையைக் கொண்டு உருவாகி உள்ள படம் 'குடும்பஸ்தன்’
வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’.
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் தடுப்புவேலியால் புதிய பதற்றம்
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முள்வேலி இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பதற்றத்தை எழுப்பி உள்ளது.
கடும் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் 'கெட்டமின்’
சிங்கப்பூரில் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘கெட்டமின்’ கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
'விமான நிலைய திட்டத்தில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கிறது’ பரந்தூர் மக்களுக்குத் துணை நிற்போம்: விஜய்
“திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் ஆளுங்கட்சியை எதிர்த்து வந்தது. இப்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
ஓவியம் வரைந்து வியக்கவைத்த விலங்குகள்
மனிதர்களால் மட்டும்தான் கலைப்படைப்புகளை உருவாக்க முடியுமா என்று சிலர் நினைக்கக்கூடும்.