CATEGORIES
Kategorier
சிங்கப்பூர் அணி குறித்துப் பயிற்றுநர் பெருமிதம்
ஆசியான் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடந்த அரையிறுதி இரண்டாம் ஆட்டத்தில், சிங்கப்பூர் காற்பந்து வீரர்கள் தங்களது நோக்கத்தை அறிந்து வியட்னாமுக்குச் சென்றனர்.
அளவறிந்து உண்பதே ஆரோக்கியத்திற்கு வழி
உணவுமுறைதான் உடல் நலனுக்கு வழிவகுக்கிறது என்பதைப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். இதுவே, பலவகை உணவு முறைகளும் பிரபலமடைய காரணமாக அமைந்துள்ளது.
யூனுக்கு எதிராகக் கைதாணை: தென்கொரிய நீதிமன்றத்திடம் கோரிக்கை
ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்குமாறு அந்நாட்டின் புலன் விசாரணைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் 16,000 இந்திய ஊழியர்கள்
இஸ்ரேலுக்குச் செல்லப் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலியக் கட்டுமானத் துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்
அமெரிக்க முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவருமான திரு ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலமானார். அவருக்கு வயது 100.
யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கரைக்கப்பட்டது.
பல ரயில்கள் ரத்து, முக்கியச் சாலைகள் மூடல் பஞ்சாப்பில் விவசாயிகள் கடுமையான போராட்டம்
விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பாட நூலில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரிவாக்கம்
தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்து ஆளுநருடன் விஜய் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 30) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.
4ஜி தலைவர்களின் முக்கியப் பங்கு குறித்து விவரித்த அமைச்சர் கா. சண்முகம் பொருளியலுக்கு உகந்த நாடாக சிங்கப்பூரை வைத்திருக்கவேண்டும்
வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரை பொருளியலுக்கு உகந்த நாடாக வைத்திருக்கத் தேவையான அம்சங்களைக் கண்டறிவது நான்காம் தலைமுறைத் (4G) தலைவர்களின் இன்றியமையாத பணி என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து உள்ளார்.
950,000 குடும்பங்களுக்கு கட்டணத் தள்ளுபடிகள்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வாழும் 950,000க்கும் அதிகமான சிங்கப்பூர் குடும்பங்கள் பயனீட்டு, சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காவி மலைப்பகுதியில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்கள் மீட்பு
லங்காவி தீவின் இரண்டாவது ஆக உயரிய மலைப்பகுதியான மாட் சின்சாங்கில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறையும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்
வரும் 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரில் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் சிறிது குறைவாக இருக்கும்.
குறைந்த வருமானத்தினருக்குக் கூடுதல் உதவி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் சலுகை இரட்டிப்பாகிறது
ஃபேர்பிரைஸ் குழுமம் எஸ்ஜி60 (SG60) கொண்டாட்டத்தை இரட்டிப்பு விலைக் கழிவுடன் தொடங்குகிறது.
ஆண்டிறுதிப் பயணமே அவர்களின் இறுதிப்பயணம்
தென்கொரிய விமான விபத்தில் பலியானோரைப் பற்றிய தகவல்கள் பதற வைப்பதாக உள்ளன.
விமானப் பாதுகாப்பு பற்றி விசாரணை நடத்த தென்கொரிய அரசாங்கம் உத்தரவு
நாட்டின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நடைமுறை பற்றி அவசர பாதுகாப்புச் சோதனை மூலம் விசாரணை நடத்த தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் உத்தரவிட்டு உள்ளார்.
தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை சிம் அட்டைகள் தொடர்பில் ஜனவரி முதல் புதிய சட்டம்
சிங்கப்பூரில் வாங்கும் சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
சிங்போஸ்ட் அதிகாரிகள் பதவி நீக்கம்: இயக்குநர் சபை விளக்கம்
சிங்போஸ்ட் நிறுவனம் அண்மையில் தனது தலைமை நிர்வாக அதிகாரி உட்பட மூன்று உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது.
‘குபேரா' படத்தில் பாடிய தனுஷ்
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 51வது படமாக உருவாகிறது ‘குபேரா’.
மலாய், தாய்லாந்து மொழிகளிலும் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்: பாடகர் அந்தோணி தாசன்
‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெறும் அஜித்தின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
மீண்டும் வெளியாகும் 'தாம் தூம்' திரைப்படம்
ஜெயம் ரவி, கங்கனா ரணாவத் இணைந்து நடித்த ‘தாம் தூம்’ படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.
கனவில்கூட நினைத்தது இல்லை: ஆதித்யா
முதன்முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய உற்சாகத்தில் இருக்கிறார் இளம் பாடகர் ஆதித்யா.
காஸா சண்டைநிறுத்தம் தொடர்பான சமரசப் பேச்சு - ஹமாஸ் பேராளர்களைச் சந்தித்தார் கத்தார் பிரதமர்
கத்தார் பிரதமரும் நிதியமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி, டிசம்பர் 28ஆம் தேதி, டோஹாவில் ஹமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்துள்ளார்.
அமெரிக்கச் சூறாவளியால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து, ஒருவர் மரணம்
மோசமான வானிலையால் டிசம்பர் 28ஆம் தேதி அமெரிக்கா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் 200க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் சுயதொழில் ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது
மலேசியாவில் சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களை (gig workers) உள்ளடக்கும் சுயதொழில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு மூன்று மில்லியனைத் தாண்டியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியா: மீண்டும் விசாரணையைப் புறக்கணித்த முன்னாள் அதிபர்
கிளர்ச்சியில் ஈடுபட்டதாகத் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
டெல்லியில் 101 ஆண்டுகளில் காணாத கனமழை
கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்தில் சாப்பாடு இல்லை: ஓடிப்போன மணமகன்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சவுந்தலி மாவட்டத்தில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மாப்பிள்ளை கடுங்கோபமடைந்தார்.
உலக நாடுகளில் தமிழ் கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: மோடி
உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும் இது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.