CATEGORIES
Kategorier
'இண்டியா' எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெற வலியுறுத்தி, \"இண்டியா' கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியா தீவிர கண்காணிப்பு
‘வங்கதேச நிலவரத்தை குறிப்பாக சிறுபான்மையினரின் நிலைமையை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது; அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்’ என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
‘ஸ்மார்ட்ஃபோன்' விற்பனையில் மந்தம்
கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவில் அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட்ஃபோன்) விற்பனை மந்தமடைந்தது.
சென்செக்ஸ், நிஃப்டி ஒரே நாளில் 3% வீழ்ச்சி
சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.33 லட்சம் கோடி சரிவு
தொலைதூரமாகும் தொடும் தூரம்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் உத்வேகத்துடன் பதக்கத்தை நோக்கி முன்னேறிவரும் இந்திய வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் 4-ஆவது இடத்திலேயே நிலைகொண்டுவிடுகின்றனர்.
எல்லையில் பிஎஸ்எஃப் கூடுதல் கண்காணிப்பு
வங்கதேச வன்முறை எதிரொலி
வேளாண் அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ்
மாநிலங்களவையில் துறை சாா்ந்த கேள்விக்கு பொய்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்தியதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்தது.
370-ஆவது பிரிவு ரத்து திருப்புமுனையான தருணம்
ஐந்தாம் ஆண்டு தினத்தில் பிரதமர் பெருமிதம்
நெல்லை மேயராக திமுகவின் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு
போட்டி வேட்பாளருக்கு 23 வாக்குகள்
பல்கலை.களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணை
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புகல்லூரிகள் ஒரே மாதிரியான கால அட்டவணை மற்றும் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட வேண்டும் என துணைவேந்தா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தியுள்ளாா்.
நகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறியுள்ளாா்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.86 கோடி பேர் பயன்
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1.86 கோடி போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
புதிய பள்ளிக் கட்டடங்கள், உயர் மின்விளக்கு வசதிகள்
சென்னை கொளத்தூரில் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
1,008 சிறப்புக் குழந்தைகள் ரயிலில் திருப்பதி பயணம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வயநாடு பேரிடருக்கு சட்டவிரோத வாழ்விட விரிவாக்கமே காரணம்
கேரள அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
'கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை'
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து ஸ்டாலின்
நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
வங்கதேச வன்முறையால் பிரதமர் பதவி ராஜிநாமா
தாய்ப்பால் ஊட்டுதல்: இலவச உதவி மையம் தொடக்கம்
தாய்ப்பால் ஊட்டுவது தொடா்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி மையத்தை சென்னை சீதாபதி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
மாநகராட்சியில் புகார் அளிக்க கூடுதல் வசதி - ஆணையர் தகவல்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறைகேட்பு மையம்.
ஆடி அமாவாசை: ராமேசுவரம், கன்னியாகுமரியில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடல்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகொரியா: உதவிக்கரம் நீட்ட முன்வந்தது ரஷியா
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
ஹமாஸ் அமைப்பின் தலைவா் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் மூத்த தளபதி கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினா்.
வெண்கலப் பதக்க சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பாட்மின்டனில் அசத்தலாக முன்னேறிவந்த இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி கண்டார்.
2029 மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் - அமித் ஷா உறுதி
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்று தொடா்ந்து 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடுகள்: விரைவில் மாதிரி திட்டம்
கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாநில அரசு சாா்பில் கட்டித் தரப்படும் புதிய வீடுகளுக்கான மாதிரி திட்டம் விரைவில் தயாரிக்கப்படும் என மாநில தொழில் துறை அமைச்சா் பி.ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவு
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னையில் கொட்டிய மழை: 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது.
ம.பி.: சுவர் இடிந்து விழுந்து 9 சிறார்கள் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் 9 சிறாா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
வயநாடு நிலச்சரிவு: தேசிய பேரிடர் கோரிக்கை குறித்து ஆய்வு - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வயநாடு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனும் பலதரப்பு கோரிக்கையின் சட்ட அம்சங்களை மத்திய அரசு ஆய்வு செய்யும் என்று மத்திய பெட்ரோலிய, சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமாா் யாதவ் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.