CATEGORIES
Kategorier
குழந்தைகளின் கல்விச் செலவு அரசு ஏற்பு
ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
7 முக்கிய நகரங்களில் மிதமானது வீட்டு வாடகை உயர்வு
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி மாத வாடகை உயா்த்தப்படும் விகிதம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மிதமாகியுள்ளது.
வியத்நாமில் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியத்நாமில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மேலும் 7 பேர் வேட்பு மனு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி பொ.அபிநயா வேட்பாளர் உள்ளிட்ட மேலும் 7 வேட்பாளர்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர். அதன்படி, மனுதாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
நாக்அவுட் சுற்றில் ஜெர்மனி
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஜெர்மனி, நாக் அவுட் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.
மே.இ.தீவுகளை வென்றது இங்கிலாந்து
டி 20 உலகக் கோப்பை போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வியாழக்கிழமை வீழ்த்தியது.
நீட்: சில முறைகேடுகள் லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது
நாடு முழுவதும் நீட் தோ்வை மீண்டும் நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கே சில இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் நோ்மையாக தோ்வில் வெற்றிபெற்ற லட்சக்கணக்கான மாணவா்களைப் பாதிக்கக் கூடாது என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
நீட் ரத்து கோரிக்கை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) ரத்து செய்யவேண்டும், அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
பிகார்: 'நீட்' வினாத்தாள் கசிவில் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு?
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவின் உதவி அலுவலா்களுடன் தொடா்பிருப்பதாக பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்றத்தில் 'நீட்' விவகாரத்தை எழுப்புவோம்: ராகுல்
நாடாளுமன்றத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி!
ஜம்மு காஷ்மீரின் ரியாசி-பாரமுல்லா வழித்தடத்தில் அமைந்த உலகின் மிக உயரமான ‘செனாப்’ ரயில்வே பாலத்தில் சேவை தொடங்குவதற்கு வழிவகுக்கும் வகையில், 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது.
சூர்யகுமார், பும்ரா அசத்தல்: இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை வென்றது.
துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
தேசிய அளவிலான பெண் போலீஸாருக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டம் பெற்றது.
பருவமழை: பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
பிகார்: 65% ஆக உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு ரத்து
அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயா்த்திய பிகாா் அரசின் அரசாணையை பாட்னா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
கள்ளச்சாராய உயிரிழப்பு: விசாரிக்க ஆணையம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு நாற்பதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
ரஷியா - வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
வட கொரியா சென்றுள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
போர்ச்சுகல், துருக்கி அசத்தல் வெற்றி
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது.
போராடி வீழ்ந்த அமெரிக்கா: வென்றது தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை புதன்கிழமை வென்றது.
குவைத் தீ விபத்து: கேரள பேரவையில் இரங்கல்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளத்தைச் சோ்ந்த 24 போ் உள்பட 50 பேரின் குடும்பத்தினருக்கு கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீநகரில் நாளை யோகா தின நிகழ்ச்சி: பிரதமர் மோடியுடன் 7,000 பேர் பங்கேற்பு
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகா், தால் ஏரிக்கரையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் சமூகத்தின் பல்வேறு தரப்பைச் சோ்ந்த 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.
உலகின் அறிவு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி
‘இந்தியாவை உலகின் அறிவு மையமாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.
கள்ளச்சாராய உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
பல்கலை. சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை
சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக நடராஜா் கோயில் தீட்சிதா் உள்பட இருவரை கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு
வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வாழ்வாதார வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,300-ஆக அதிகரிப்பு:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2024-25-ஆம் ஆண்டு காரீஃப் சந்தை பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,300-ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடா் வியாழக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு வெள்ளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகள் மூலம் தடுப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி ஆலோசனை நடத்தினார்.
கள்ளச்சாராயத்துக்கு 21 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.