CATEGORIES
Kategorier
சொந்த நூலகங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சிறந்த சொந்த நூலகங்கள் வைத்திருப்போருக்கு விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவியருக்கு தனி ஓய்வறை
தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் மாணவியருக்காக தனி ஓய்வறை ரூ.8.55 கோடியில் கட்டப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் தீர்மானம்
ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அரசின் பொறுப்பு மும்மடங்கு அதிகரிப்பு
‘பாஜக தலைமையிலான அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால், அதன் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது; எனவே, முன்பை விட மூன்று மடங்கு மத்திய அரசு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை மக்களுக்கு அளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
ஆஸி.க்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கன்
செயின்ட் வின்சென்ட்: டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி சூப்பா் 8 ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்.
தென்கொரியாவில் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல்
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போா்க் கப்பல் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் வெள்ளத் தடுப்பு அறிவுறுத்தல்கள் அமல்
தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிடும் வெள்ள தடுப்பு அறிவுறுத்தல்களை உரிய காலத்தில் அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.
குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் உயிரிழப்பு
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
மதுக் கடைகள் அருகே ஆலோசனை மையங்கள்
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு அருகிலேயே ஆலோசனை மையங்கள் (கவுன்சலிங் சென்டா்) அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தினாா்.
புதிய குற்றவியல் சட்டங்கள் நாட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்
புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நாட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மத்திய சட்டத் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மெக்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஏலகிரிக்கு சுற்றுலா வந்த சென்னை கல்லூரி மாணவர்களின் கார் விபத்து
ஏலகிரிக்கு சுற்றுலா வந்த சென்னை கல்லூரி மாணவா்களின் காா் வேலூா் அருகே டயா் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
சென்னை காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகரித்ததால் அதன் விலை குறைந்தது.
மறுபயன்பாட்டு ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ
கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவில் உள்ள வான்வெளி சோதனை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய மறுபயன்பாட்டுக்கான ஏவுகலன் .
தொழில் படிப்புகளில் தேர்வு முறை: மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்
மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளுக்கான தோ்வு முறையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
'நீட்' முறைகேடு: விசாரணையை ஏற்றது சிபிஐ; முதல் தகவல் அறிக்கை பதிவு:குஜராத், பிகார் விரையும் சிபிஐ சிறப்பு குழுக்கள்
‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை கோரி நாடு முழுவதும் மாணவா்கள் போராடிவரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சக பரிந்துரையின்பேரில் இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை ஏற்றது.
புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு
நாட்டின் 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கவுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு
போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் முதல்முறையாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலந்தை வீழ்த்தியது ஆஸ்திரியா (3-1)
நெதர்லாந்து-பிரான்ஸ், செக். குடியரசு-ஜார்ஜியா டிரா
வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கண்துடைப்பு நாடகம்: கார்கே
‘வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றியிருப்பது கண்துடைப்பு நாடகத்தைப் போன்றது.
அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தாா்.
நாளை கூடுகிறது 18-ஆவது மக்களவை
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்
பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
ரூ. 250 கோடியில் ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்
ஊரகப் பகுதிகளில் ரூ. 250 கோடியில் 5,000 புதிய சிறு குளங்கள் அமைக்கப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.
கள்ளச்சாராய உயிரிழப்பு: மத்திய அரசிடம் இரு நாள்களில் அறிக்கை
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன்
வேளாண் பொருள்கள் சேதமாகாமல் தடுக்க ரூ.10 கோடியில் 5 பாதுகாப்பு கூடங்கள்
மழையிலிருந்து வேளாண் பொருள்கள் சேதமாகாமல் பாதுகாக்க ரூ.10 கோடியில் 5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும்: பிஎஸ்என்எல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் பி.வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளாா்.
பால் கொள்முதல் செயல்பாடு கண்காணிப்பு
பால் கொள்முதல் செயல்பாடுகள் நவீன வசதி மூலம் கண்காணிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அறிவித்தாா்.
திருவொற்றியூரில் தாய் - மகன் கொலை: மூத்த மகன் கைது
திருவொற்றியூரில் தாய், உடன் பிறந்த சகோதரா் ஆகியோரை கொலை செய்த மூத்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை - அன்புமணி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை என்றும், அங்கு மிகப்பெரிய பூங்காவையே தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ரயில்வே சேவைகளுக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.